பெரும் ஆபத்து! குக்கர் யூஸ் பண்ணறீங்களா? அப்போ இந்த உணவுகளை மட்டும் சமைக்காதீங்க!!

Photo of author

By Gayathri

இன்றைய காலத்தில் உணவுகள் மட்டுமின்றி உணவு சமைக்க பயன்படுத்தும் பொருட்களும் காலத்திற்கேற்ப மாறி வருகிறது.நம் அம்மா,பாட்டி காலத்தில் மண் பாத்திரங்கள்,இரும்பு பித்தளை பாத்திரங்களில் சமைப்பது வழக்கமாக இருந்தது.

பிறகு அலுமினியம்,நான்-ஸ்டிக்,ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் போன்ற பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு தற்பொழுது அதன் பயன்பாடு அதிகரித்துவிட்டது.மண் மற்றும் இரும்பு பாத்திரங்களை விட அலுமியம்,நான்-ஸ்டிக் போன்ற பாத்திரங்களில் சமைப்பது சுலபமாக இருப்பதாலும் விரைவில் சமையல் ஆகிவிடுவதாலும் பெண்கள் இதுபோன்ற பாத்திரங்களில் சமைக்கவே விரும்புகின்றனர்.

அதிலும் குக்கரில் சமைக்க சில நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்வதால் பருப்பு,பிரியாணி,நான் வெஜ் உணவுகளை அதில் சமைக்கின்றனர்.இதில் சாதம் வடிக்கும் குக்கர்,இட்லி குக்கர் என்று பல வகை வந்துவிட்டது.

உணவுப் பொருட்களை சீக்கிரம் வேகவைக்கவே குக்கர் பயன்படுத்தப்படுகிறது.இந்நிலையில் தற்பொழுது அனைத்து வகை உணவுகளையும் குக்கரில் சமைக்க தொடங்கிவிட்டனர்.இதனால் உணவின் சுவை குறைவதோடு உடல் ஆரோக்கியமும் முழுமையாக பாதிக்கப்படுகிறது.

குக்கரில் சமைக்கக் கூடாத பொருட்கள்:

1)பால் பொருட்களை குக்கரில் சமைக்கக் கூடாது.க்ரீம்,சீஸ்,பால் போன்றவற்றை குக்கரில் போட்டு சமைக்கக் கூடாது.

2)பாஸ்தா,நூடுல்ஸ் போன்ற உணவுகளை குக்கரில் சமைக்கக் கூடாது.இப்படி சமைத்தால் உணவின் சுவை குறைந்துவிடும்.

3)கீரைகளை குக்கரில் சமைக்கக் கூடாது.இப்படி சமைத்தால் கீரையில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

4)குக்கரில் உணவுகளை வறுக்கக் கூடாது.பிரஷர் குக்கரில் பிஸ்கட்,கேக் போன்றவற்றை பேக் செய்யக் கூடாது.