தமிழக அரசின் அட்டகாசமான முயற்சி! மாஸ் காட்டும் முதல்வர்!

Photo of author

By Kowsalya

மின் தொடர்பான பிரச்சனைகளை விரைவில் தீர்த்து வைப்பதற்காக மின் வாரிய அலுவலகங்களில் மின் நுகர்வோர்களுக்கு சேவை மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளது இதை இன்று முதல்வர் தொடங்கி வைத்தார்.

 

பதவியேற்ற சில காலத்திலேயே அதிகமான திட்டங்களை கொண்டு வந்து முதல்வர் அவர்கள் அட்டகாசமாக வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டில் 9 மாதமாக மின் பராமரிப்புகள் செய்யப்படாததால் பல்வேறு கருவிகள் பல்வேறு மின் கம்பங்கள் அனைத்தும் பழுதடைந்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் பராமரிக்கும் பணியை தொடங்கி உள்ளார், அனைத்து மாவட்ட மின் அலுவலகங்களில் பராமரிப்பு பணிகள் தொடங்கி உள்ளன.

 

அதன் காரணமாக சென்னையில் கூட நேற்று பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது அது மூன்று மணி நேரம் மின்வெட்டு மட்டுமே இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இந்த செய்தியை பயன்படுத்திக் கொண்ட பல இடங்களில் மின் தொடர்பான புகார்கள் வருவதாக தெரிகிறது. மின் புகார்களை சரிசெய்ய மின் நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் சேவை இயங்கும் என்று சொல்லப்படுகிறது.

 

நவீன கணினி மையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வர தமிழக அரசு , தொடர்ந்து சென்னை அண்ணா சாலையில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் மின் நுகர்வோர் சேவை மையம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

 

94987 94987 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு மின்தடை, மின் கம்பங்கள் சேதம் பற்றிய புகார் அளிக்கலாம் என்றும் அதே போல் தமிழகம் முழுதும் மக்கள் மின்தடை தொடர்பாக புகார்களை அளிக்க 1912 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் நீங்கள் அளித்த புகாரை ஏற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் செய்யப்பட்டதா என்று உங்கள் தொலைபேசி எண்ணிற்கு குறுந்தகவல்கள் அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளது.