கோர்ட்டில் மிகுந்த பரபரப்பு! திடீரென வெடித்து சிதறிய மர்மமான பொருள்!
டெல்லியில் ரோகிணி என்ற நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை பத்து முப்பது மணி அளவில் மர்மப்பொருள் ஒன்று வெடித்து சிதறியுள்ளது. அந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது இப்படி ஒரு மர்மமான வெடிபொருள் வெடித்து சிதறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மேலும் இந்த வெடி விபத்தில் ஒரு போலீஸ்காரர் படுகாயம் அடைந்துள்ளார். அதன் காரணமாக அங்கு நடைபெற்ற நீர்கிமன்ற பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் அந்த நீதிமன்ற வளாகமே போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது நீதிமன்றம் அரை என 102 வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த லேப்டாப் வகையில் இந்த மர்மப் பொருள் வெடித்தது.
அதன் காரணமாக தடயவியல் நிபுணர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு படையின் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் அந்த மர்ம பொருள் வைக்கப்பட்டிருந்த லேப்டாப் பையில் இருந்து வயர்கள் மற்றும் சில கருப்பு பாகங்கள் அனைத்தும் வெடித்து சிதறி உள்ளன. அதன் காரணமாக வெடித்தது வெடி குண்டாக இருக்கலாம் அல்லது இருக்கலாம் என்றும் வெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுகின்றது.