டிரைவிங் தெரிந்தவர்களுக்கு அருமையான வேலைவாய்ப்பு! 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர் டிரைவர் பணிகள் அறிவிப்பு!

Photo of author

By Amutha

டிரைவிங் தெரிந்தவர்களுக்கு அருமையான வேலைவாய்ப்பு! 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர் டிரைவர் பணிகள் அறிவிப்பு!  

108 ஆம்புலன்ஸ் பணிக்கான டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் சேவையில் பணிபுரிய டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கான ஆட்கள் தேர்வு நாளை ஜனவரி -29 நடைபெற உள்ளது.  இதில் ஓட்டுநர் பணிக்கான தகுதியாக வயதுவரம்பு 24 வயதுக்கு மேல் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அவரின் உயரமானது 162.5 சென்டிமீட்டருக்கு குறையாமல் இருப்பதுடன் ஓட்டுநர் உரிமம் எடுத்து கட்டாயம் மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

இந்தத் தேர்வில் தேர்வு செய்யப்படும் நபருக்கு மாத ஊதியமாக ரூபாய் 15 ஆயிரத்து 235 ரூபாய் வழங்கப்படும். இந்தத் தேர்வானது பல்வேறு படிநிலைகளைக் கொண்டது. எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், கண்பார்வை தெளிவுத்திறன்,  மருத்துவம் சம்பந்தப்பட்ட திறன், சாலை விதிகள் சம்பந்தப்பட்ட தேர்வு ஆகியன நடைபெறும்.

இந்தத் தேர்வுகளில் வெற்றி பெறும் நபர்களுக்கு 10 நாட்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர். பயிற்சி காலத்தில் தேவையான தங்குமிடம் ஏற்பாடு செய்து தரப்படும்.

இதேபோல் மருத்துவ உதவியாளர்களுக்கான பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 12 ஆம் வகுப்பிற்கு பிறகு  பிஎஸ்சி நர்சிங் அல்லது 2 வருடங்கள் நர்சிங் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.  மேலும் லைப் சயின்ஸ், பிஎஸ்சி விலங்கியல், தாவரவியல், மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி இவற்றில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் 15 ஆயிரத்து 435 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். இவர்களுக்கு வயது 19 வயதுக்கு மேல் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.