இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு என்ஐ டி -யில் வெளிவந்துள்ள சூப்பரான வேலை வாய்ப்பு!! விண்ணப்பித்து விட்டீர்களா?
தேசிய தொழில்நுட்ப கழகத்தில்[ NIT] காலியாக உள்ள ஜேஆர்எப் பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இன்ஜினீயர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. என்ஐடி -யின் திருச்சி கிளைக்கு தற்போது காலியாக உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி ; Junior Research Fellow
காலியிடங்கள் ; 1
சம்பளம் ; ரூ. 31000-35000+ 18% எச்ஆர் ஏ
தகுதி ; Industrial and Production Engineering, Manufacturing Engineering, CAD, CAM, போன்ற எதாவது ஒரு பொறியியல் பாடப்பிரிவில் எம்இ அல்லது எம் டெக் பட்டம் பெற்று இருப்பதோடு மட்டுமில்லாமல் GATE நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை; எம்.இ அல்லது எம்.டெக் பாடப்பிரிவில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் GATE தேர்வின் மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu என்ற இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை A4 வெள்ளைத் தாளில் தயார் செய்து அதனுடன் தேவைப்படும் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி; Dr.Parthiban, professor
Department of Production Engineering ,
National Institute of Technology,
Tiruchirappalli, Tiruchirappalli – 620 015,
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்; 26.06.2023