செம ஆஃபர்! கையில் பணமே இல்லையென்றாலும் சுற்றுலா செல்லலாம் உடனே முந்துங்கள்!

0
308

பலவிதமான பொருட்களை வாங்குவதற்கு சேவைகள் பயன்படும் என்று பலவற்றுக்கும் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிறுவனங்களும் இருக்கின்றன. சுய கடன், வீட்டுக் கடன், என்ற கடன்களை தவிர்த்து தற்போது வீட்டு உபயோகப் பொருட்களுக்கு கடன் வழங்கும் திட்டங்கள் இருக்கின்றன.

இதனை தவிர்த்து கைமாற்றாக சிறிய தொகையை பே லேட்டர் என்ற சில சிறிய நிதி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.1 மாதம் முதல் 3 மாதம் வரை என்று குறிப்பிடப்பட்ட கால அளவில் இந்த சேவைகள் நிதி உதவி வழங்குகின்றன.

பயணம் செய்வதற்கு குறுகியகால கடன் வழங்கும் நிறுவனங்கள் தற்சமயம் காணப்பட்டு வருகின்றன. அதாவது travel now pay later இன்று பணம் செலுத்தாமல் பயணம் செய்யலாம் என்பதை டூரிஸம் சேவைகள் வழங்கும் நிறுவனங்களே விளம்பரப்படுத்தி வருகின்றன.

கடைசி சமயத்தில் பணமில்லாமல் சுற்றுலா செல்ல முடியாமல் தவிக்கும் நபர்களுக்கு இந்த இறுதி நிமிட நிதி உதவி உண்மையில் உதவிகரமாக இருக்குமா? என்று தெரியவில்லை. இது தொடர்பான விபரங்களை தற்போது இங்கே நாம் காணலாம்.

நாட்டில் உலகளவில் இன்று பல விதமான பெரிய டிராவல் நிறுவனங்கள் இருக்கின்றன, அவை உங்களுக்கான பயணத்திட்டத்தை வடிவமைப்பது முதல் வீட்டிலிருந்து கிளம்புவதிலிருந்து வீட்டுக்குத் திரும்புவது வரையில் அனைத்து விதமான பயண தேவைகளை பேக்கேஜாக வழங்குகின்றன.

இந்த சூழ்நிலையில், மேக் மை ட்ரிப் மற்றும் எக்ஸ்பீடியா உள்ளிட்ட பயண நிறுவனங்கள் தற்சமயம் வங்கிகள், பேமெண்ட் தளங்கள், நிதி நிறுவனங்கள், உள்ளிட்ட pay later சேவை ஆரம்பித்திருக்கின்றன. இந்த சேவையை பயன்படுத்திக்கொண்டு நீங்கள் பணம் செலுத்தாமல் உங்களுடைய பணத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அமேசான், பிலிப்க்கார்ட், உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்கள் வழங்கும் இந்த சேவைகளை போலவே இதுவும் ஒரு டிஜிட்டல் கடன் என்று சொல்லப்படுகிறது.vecation now pay later என்ற இந்த சேவையினால் பேங்கிங் பைனான்ஸ் கம்பெனி மூலமாக வழங்கப்படுகிறது என்ற திட்டத்தின் மூலமாக கடன் வாங்குபவர்கள் வழங்கப்படும் கடனுக்கு 13 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.

கடன் தொகைக்கு ஏற்ப கடன் திருப்பி செலுத்தும் காலம் அமைக்கப்படும், அதோடு அதிகபட்சமாக 18 மாதங்கள் வரையில் கடன் செலுத்தலாம். மாதாந்திர தவணை முறை மூலமாக நீங்கள் பயணத்துக்கான தொகையை திருப்பி செலுத்தலாம்.

நீங்கள் எப்போது புக்கிங் செய்தீர்களோ அந்த மாதத்தின் அடுத்த மாதம் முதல் மாதாந்திர தவணை செலுத்த வேண்டும். அதாவது இதை நீங்கள் ஒரு கடனாக பெறாமல் அதனை பயணத்திற்கான புக்கிங் மூலமாக நீங்கள் புக் செய்த பிறகு பதிவு செய்த அடுத்த மாதத்திலிருந்து மாதம் தோறும் சுற்றுலாவுக்கான தொகையை தாங்கள் செலுத்திக் கொள்ளலாம்.

இந்த மாதம் தங்களிடம் சுற்றுலாவுக்கு முன்பதிவு செய்ய அல்லது செல்வதற்கு பணமில்லை என்றால் நீங்கள் பணம் இல்லாமல் இந்த சேவைகளை பயன்படுத்தி கொண்டு முன்பதிவு செய்து சுற்றுலா சென்று வரலாம்.

அதற்குப் பிறகு அடுத்த மாதம் முதல் மாதாந்திர தவணையாக நீங்கள் செலவு செய்த தொகைக்குப் உரிய தொகையை மாதாமாதம் செலுத்திவர இதன் மூலமாக கையில் பணமில்லை என்றாலும் கூட பயணம் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.

சில பயண சேவை நிறுவனங்கள் பயணம் செய்த தவறை 15 நாட்களுக்குள் திருப்பி செலுத்தினால் கடனை வட்டி இல்லாமல் செலுத்த அனுமதி வழங்குகிறது, மாதம் தோறும் தவணை செலுத்துவதில் தவறினால் 2 முதல் 3 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

Previous article10th படிச்சிருக்கீங்களா? அப்படின்னா இந்திய அஞ்சல் துறையில் உடனடி வேலைவாய்ப்பு உடனே பதிவு செய்யுங்கள்!
Next articleவிரைவில் முடிவடைகிறது குடியரசுத் தலைவருக்கான பதவிக்காலம் அடுத்த குடியரசுத் தலைவர் யார்? இன்று தொடங்கும் வேட்புமனு தாக்கல்!