ஆன்மீக படத்திற்கு கிடைத்த அருமையான வெற்றி !! 410 கோடி வசூல் சாதனை வெளிவந்த நியூ அப்டேட்!!

ஆன்மீக படத்திற்கு கிடைத்த அருமையான வெற்றி !! 410 கோடி வசூல் சாதனை வெளிவந்த நியூ அப்டேட்!!

ஆதிபுருஷ் படம் ஜூன் 16ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்தது. இந்த படத்தை ஓம் ராவத் இயக்கத்தில்  மற்றும் புஷன்குமார்  தயாரிப்பிலும் உருவாகி வெளிவந்தது. இந்த படத்தில் பாகுபலி நடிகர் பிரபாஸ் நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் கீர்த்தி சானோன் மற்றும் சைப் அலிகான் போன்றவர்களும் நடித்துள்ளார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியானது.

இது ராமாயண கதையின் ஒரு பகுதி இந்த படமாகும். இந்த படத்தில் பிரபாஸ் இராமனாகவும், சைப் அலிகான் ராவணனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளார்கள்.

இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படம் 2டி மற்றும் 3டி தொழில்நுட்பங்களில்   இந்தியா முமுவதும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இத்திரைப்படம் வெளியவந்த 6 நாட்களில் 410 கோடி வசூலாகியுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது . ஆதிபுருஷ் படம் அதிக வசூல் சாதனையை படைத்துள்ளது.

மேலும் இந்த படத்தில் ஒரு மதத்தை அவமதிக்கும் வசனம் , காட்சி அமைப்புள்ளதாக வட மாநிலங்கள் எதிர்த்து வருகின்றனர்.