TVK DMK: தமிழக அரசியலில் சட்டமன்ற தேர்தல் தொடங்குவதற்குள் பல மாற்றங்கள் அரங்கேற உள்ளது. அந்த வகையில் திமுக பல திட்டங்களை தீட்டி சையது இறங்கி உள்ளது. விஜய் அரசியலுக்குள் கால் பதித்துள்ளதால் கட்டாயம் வாக்கு வங்கி சிதறக்கூடும் என்பதை தெரிந்து அவருக்கு இணையான நட்சத்திர நடிகரை இணைக்க முயற்சி செய்து வருகிறார்.
அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் சூர்யா. சமீபத்தில் இவரது அகரம் பவுண்டேஷன் வெற்றி குறித்தான விளம்பரம் பரவலாக காணப்படுகிறது. அதுமட்டுமின்றி இவர் திமுகவின் மறைமுக கைக்கூலி என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. விஜய்’யின் மவுசை குறைக்கவே அவர்கள் இதை கையாளுவதாக அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர். அப்படி பார்க்கையில் விஜய்யை எதிர்க்க சரியான ஆளாக இவர் இருப்பார் என்று ஸ்டாலின் தேர்ந்தெடுத்துள்ளாராம்.
மேற்கொண்டு விஜய் போட்டியிடும் தொகுதியில் இவரை நட்சத்திர பேச்சாளராக நிறுவப்படலாம் என்று கூறுகின்றனர். இது ரீதியாக சூர்யா மற்றும் அவர் குடும்பத்தில் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. விஜய்க்கு எதிராக சூர்யா என வர நேர்ந்தால் அரசியல் களம் சூடு பிடிக்கும் என்பது எந்த மாற்றமும் இல்லை. இதற்கு எதிராக விஜய் எந்தவித செயல்முறையை கையாள்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.