க்ரீன்ஃபீல்டு எக்ஸ்பிரஸ்வே கம்மிங் சூன்: வெறும் 4 மணி நேரத்தில் திருச்சி டூ சென்னை பயணம்!!
தமிழகத்தில் திருச்சியில் இருந்து தலைநகர் சென்னைக்கு செல்ல கிட்டத்தட்ட 7 மணி நேரம் பயணிக்க வேண்டியுள்ளது.போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையாக இருப்பதினால் பயண நேரம் நீள்கிறது.இந்நிலையில் திருச்சியில் இருந்து சென்னைக்கு வெறும் 4 மணி நேரத்தில் பயணம் மேற்கொள்ளும் வகையில் “பாரத்மாலா பரியோஜனா” திட்டத்தின் கீழ் சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ்வே அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை திட்டம் வகுத்து வருகிறது.
ஏற்கனவே சென்னை டூ சேலம் எக்ஸ்பிரஸ்வே அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை திட்டம் வகுத்து நிலம் கையப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது.ஆனால் இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
சென்னை-சேலம் 8 வழிச்சாலை செயல்பாட்டிற்கு வந்திருந்தால் அவை தமிழகத்தின் முதல் எக்ஸ்பிரஸ்வே என்ற பெருமையை பெற்றிருக்கும்.இந்நிலையில் தற்பொழுது இரண்டாம் கட்டமாக சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ்வே வரவிருப்பது மக்களிடையே பெரிதும் கவனம் பெற்றிருக்கிறது.
சுமார் 35,000 கோடி செலவில் 470 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படும் இந்த எக்ஸ்பிரஸ்வே
ஏற்கனவே உள்ள வழித்தடத்தை பயன்படுத்தாமல் புதிய வழித்தடம் மூலம் அமைக்கப்பட இருக்கிறது.இதனால் நிலம் கையகப்படுத்தும் செலவு,கட்டுமானத்திற்கான கால அளவு குறையும்.
இந்த எக்ஸ்பிரஸ்வே மூலம் சென்னை,திருச்சி,தஞ்சாவூர்,சிவகங்கை,தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்கள் இணைக்கப்பட உள்ளது.சென்னை டூ திருச்சி 8 வழிச்சாலை திட்டம் நடைமுறைக்கு வந்தால் பயண நேரம் குறையும்.இதனால் எப்போது இத்திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.