விஷப் பூச்சிகளில் ஒன்றான தேள் கடித்தால் அதிக வலியை உண்டாக்கும்.அதிக விஷம் நிறைந்த தேள்கள் கொட்டினால் மட்டுமே உயிருக்கு ஆபத்து ஏற்படும்.சிறு குழந்தைகள் மட்டும் வயதானவர்களை தேள் கடித்தால் கடுமையான தொந்தரவுகளை அனுபவிக்க நேரிடும்.
ஆரோக்கியமான ஒருவரை தேள் கடித்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது.ஆனால் தேள் கடித்தது உறுதியானால் அதற்கான சிகிச்சை அல்லது கை வைத்தியத்தை செய்து விஷத்தை முறிக்க வேண்டும்.
தேள் கடி அறிகுறிகள்:
*தேள் கடித்த இடத்தில் வலி மற்றும் எரிச்சல்
*தேள் கடித்த இடத்தில் தடுப்பு
*உடல் நடுக்கம்
*வாந்தி உணர்வு
தேள் விஷம் முறிய வீட்டு வைத்தியம்:
தேவையான பொருட்கள்:-
1.ஆவார இலை
2.தண்ணீர்
செய்முறை:-
தேவையான அளவு ஆவார இலை எடுத்து தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
இந்த பேஸ்டை ஒரு காட்டன் துணியில் போட்டு பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.இந்த ஆவார இலை சாற்றை தேள் கடித்த இடத்தில் பூசினால் அதன் விஷம் முறிந்துவிடும்.
மற்றொரு தீர்வு:
தேவையான பொருட்கள்:-
1.அவுரி இலை
2.கறிவேப்பிலை
செய்முறை:-
அவுரி இலை மற்றும் கறிவேப்பிலை சம அளவு எடுத்து தண்ணீரில் போட்டு அலசிக் கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.இந்த பேஸ்டை தேள் கடித்த இடத்தில் பூசினால் அதன் விஷம் முறிந்துவிடும்.
தேவையான பொருட்கள்:-
1.தும்பை இலை
செய்முறை:-
சிறிதளவு தும்பை இலையை பேஸ்ட் பதத்திற்கு அரைத்து தேள் கடித்த இடத்தில் அப்ளை செய்தால் அரிப்பு,எரிச்சல்,விஷம் நீங்கும்.