தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு தூக்கில் தொங்கிய மணமகன்: கதறி அழுத மணமகள்

Photo of author

By CineDesk

தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு தூக்கில் தொங்கிய மணமகன்: கதறி அழுத மணமகள்

சில நிமிடங்களில் மணப்பெண்ணுக்கு தாலி கட்ட மணமேடை ஏற வேண்டிய மணமகன் ஒருவர் தூக்கில் தொங்கி பிணமேடை ஏறிய சோக நிகழ்ச்சி ஐதராபாத் அருகே நடந்துள்ளது

ஐதராபாத்தை சேர்ந்த சதீப் என்ற தொழிலதிபர் மகன் மற்றும் சாப்ட்வேர் என்ஜினியருக்கும், அவருடைய நெருங்கிய உறவினர் பெண் ஒருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து, நேற்று திருமணம் நடைபெற இருந்தது

திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் உடைமாற்றி வர தனி அறைக்குச் சென்ற மணமகன் நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை., இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை தட்டியும் எந்தவித பலனும் இல்லாததால், பதற்றம் அடைந்து கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே மணமகன் சந்தீப், தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்

உடனடியாக திருமணத்திற்கு வந்திருந்த மருத்துவர் ஒருவர் அவரை சோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததால் மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்

மணமகனின் தாத்தா உள்பட ஒருசிஅ உறவினர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்ததால் அந்த சோகத்தில் மணமகன் சந்தீப் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி அவருக்கு வேறு யாருடனும் காதல் இருந்ததா? என்று கோணங்களிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்

சில நிமிடங்களில் மணமேடையில் தனக்கு தாலி கட்ட வேண்டிய மணமகன் தூக்கி தொங்கி மரணம் அடைந்ததை அறிந்த மணமகள் கதறி அழுத காட்சி காண்போரை நிலைகுலையச் செய்தது