கைப்பிடித்த மணமகன்!  திடீரென திருமணத்தை நிறுத்திய மணமகள்! 

0
185
#image_title

கைப்பிடித்த மணமகன்!  திடீரென திருமணத்தை நிறுத்திய மணமகள்! 

மணமகன் கையைப் பிடித்து இழுத்ததால் கோபமுற்ற மணமகள் திருமணத்தை நிறுத்திய   சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மணமகன் மேடையில் கை பிடித்து இழுத்ததால் மணமகள் தவறி விழுந்துள்ளார். இதனால் திருமணமே வேண்டாம் என மணமகள் ரத்து செய்துள்ளார். உத்திர பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் பிரோசாபாத் மாவட்டத்தில் காயிர்கார் நகரத்தில் திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. அந்த நகருக்கு உட்பட்ட ரசாயினி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ஆதேஷ். அதே நகருக்கு அருகில் ஜஸ்ரானா நகரில் ஜஜுமாய் கிராமத்தில் வசித்து வருபவர் மனோஜ் குமாரி.  இந்நிலையில் ஆதேசுக்கும், மனோஜ் குமாருக்கும் திருமணம் செய்வதாக பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. 

இதற்காக இரு வீட்டினரும் சுறுசுறுப்பாக தயாராகிக் கொண்டிருந்தனர். இல்லம் ஒன்றில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து திருமண ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு விருந்தினர் இல்லத்தை வந்தடைந்தது.

இரவு உணவு முடித்த பின்பு மணமக்கள் இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் சடங்கு இருந்தது. இதற்காக மணமகன் தயாராகி மேடைக்கு முன்னரே வந்து சேர்ந்து விட்டார். மணமகள் அலங்கார முடிந்து மெல்ல நடந்து தோழிகள் புடை சூழ மேடைக்கு வந்தார். அதுவரை மேடையில் அமைதியாக அமர்ந்திருந்த ஆதேஷ் சட்டென மனோஜ் குமாரின் கையைப் பிடித்து இழுத்து சீக்கிரம் வரும்படி கூறியுள்ளார். இதில் மனோஜ் குமாரி தவறி கீழே விழுந்துள்ளார். இதன் காரணமாக அவர் கடுமையான ஆத்திரம் அடைந்ததாக கூறப்படுகிறது.

ஆதேஷின் செயலால் மேடையிலேயே இரு வீட்டார்க்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. உடனே மணமகள் திருமணம் வேண்டாம் என ரத்து செய்து விட்டார். மணமகன் செயலால் மணமகள் வீட்டார் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்து ஹர்வேந்திர மிஷ்ரா தலைமையிலான ஷிகோகாபாத் காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தி நிலைமையை சரி செய்ய முயன்றனர்.

இரு குடும்பத்தினரும் மணமகளை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால், தனது முடிவில் மணமகள் உறுதியாக திருமணம் வேண்டாம் என இருந்து விட்டார். திருமணம் செய்ய முடியாது என மணமகள் கூறியதால் மணமகள் இன்றி ஊர்வலம் திரும்பி சென்றது. 

 

 

 

 

Previous articleபொது இடத்தில் இனி சிறுநீர் கழித்தால் அபராதம்! மாநகராட்சி வெளியிட்ட அதிரடி உத்தரவு!
Next article24 ஆம் தேதி இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை! தேர்வுகள் அனைத்தும் வழக்கம் போல் நடைபெறும் ஆட்சியர் உத்தரவு!