குரூப் 1 தேர்வு   எழுதுபவர்களின் அவர்களின் கவனத்திற்கு!டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை!

0
210
Group 1 Exam For Attention Writers!Report Released by TNPSC Exam Board!
Group 1 Exam For Attention Writers!Report Released by TNPSC Exam Board!

குரூப் 1 தேர்வு   எழுதுபவர்களின் அவர்களின் கவனத்திற்கு!டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை!

குரூப் 1 தேர்வு அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் தமிழ்நாடு குடிமைப் பணி, தமிழ்நாடு காவல் பணி, தமிழ்நாடு வணிகவரிப் பணி,  தமிழ்நாடு கூட்டுறவுப் பணி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சிப் பணி, தமிழ்நாடு பொதுப் பணித்துறைகளில் நிரப்பப்படவுள்ளது. மேலும் துணை ஆட்சியர், துணைக் காவலர், உதவி ஆணையர், வணிகவரித் துறை, துணைப் பதிவாளர், உதவி இயக்குநர், ஊரக வளர்ச்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 91 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. மேலும் இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆகஸ்ட் 22 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடங்களின் விவரம்:

துணை ஆட்சியர் பணி: 18 காலி பணியிடங்கள் உள்ளது. மேலும் துணைக் காவல் கண்காணிப்பாளர் பணி: 26காலி பணியிடங்கள் உள்ளது.உதவி ஆணையர், வணிகவரித் துறை பணி:25 காலி பணியிடங்கள் உள்ளது. கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் பணி: 13 காலி பணியிடங்கள் உள்ளது.மேலும் உதவி இயக்குநர், ஊரக வளர்ச்சித் துறை பணி: 07 காலி பணியிடங்கள் உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தமிழ்நாடு பொதுப்பணி பணி: 03 காலி பணியிடங்கள் உள்ளது.

கல்வித் தகுதி:

வணிகம் மற்றும் சட்டம் இரண்டிலும் பட்டம் பெற்றவர், வரி விதிப்பு சட்டங்களில் டிப்ளமோ, வணிகம் அல்லது சட்டத் துறையில் பட்டம் மற்றும் வரி விதிப்பு சட்டங்களில் டிப்ளமோ, பொருளாதாரம், கல்வி, சமூகவியல், புள்ளியியல் அல்லது உளவியலில் பட்டம், சமூக அறிவியல், சமூகவியலில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ படித்தவர்கள், மற்றும் தொழில்துறை அல்லது தனிநபர் மேலாண்மை அல்லது தொழிலாளர் நலனில் அனுபவம், கிராமப்புற சேவையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி 21 வயது நிறைவடைந்தவராகவும் 39 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

இந்த பணிக்கான சம்பளம்: மாதம் ரூ.56100 ல்லிருந்து 2,05,700 வரை

விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150, முதனிலைத் தேர்வு ரூ.100, முதன்மை எழுத்துத் தேர்வு ரூ.200 செலுத்த வேண்டும். மேலும் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு அடங்கிய பதவிகளுக்கு தெரிவு மூன்று நிலைகளைக் கொண்டது. எழுத்துத் தேர்வு, முதல்நிலைத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, நேர்காணல், வாய்மொழித் தேர்வு மற்றும் கலந்தாய்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in / www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 31.10.2022 இந்த  பணிக்காக ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 22.08.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

Previous articleகொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்ப உள்ளார் ஓ. பன்னீர்செல்வம்!!
Next article‘ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ஆபத்தா?… பென் ஸ்டோக்ஸ் ஓய்வு எச்சரிக்கை மணியா?’-முன்னாள் வீரர் கருத்து