குரூப் 2&2A எக்ஸாம்: இன்று தான் கடைசி நாள்!! உடனே இந்த லிங்க் கிளிக் செய்து வேலையை முடிங்க!!

Photo of author

By Divya

குரூப் 2&2A எக்ஸாம்: இன்று தான் கடைசி நாள்!! உடனே இந்த லிங்க் கிளிக் செய்து வேலையை முடிங்க!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிகின்ற செப்டம்பர் 14 அன்று குரூப் 2&2A எக்ஸாம் நடத்துகிறது.இந்த தேர்வில் வெற்றிபெறும் தேர்வர்கள் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்,நன்னடத்தை அதிகாரி,தொழிலாளர் உதவி ஆய்வாளர்,சிறப்பு உதவியாளர்,சிறப்பு கிளை உதவியாளர்,நகராட்சி ஆணையர்,உதவி பிரிவு அலுவலர்,கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர்,வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 2327 காலிப் பணியிடங்களுக்கு பணியமர்த்தபட உள்ளனர்.

குரூப் 2&2A தேர்விற்கு விண்ணப்பம் செய்ய ஏதேனும் ஒரு துறையில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும்.கடந்த ஜூன் 09 அன்று குரூப் 4 மற்றும் ஜூலை 13 அன்று குரூப் 2 தேர்வு நடைபெற்ற நிலையில் செப்டெம்பர் 14 அன்று நடைபெற உள்ள குரூப் 2&2A தேர்வு மீதான ஆர்வம் அனைவரிடத்தில் அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் ஜூன் 20 அன்று குரூப் 2&2A தேர்விற்கான நோட்டிபிகேஷன் மற்றும் ஆன்லைன் விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு இருந்தது.இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்ய ஜூலை 19 இறுதி நாள் என்று தெரிவித்திருந்த நிலையில் இன்றுடன் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் முடிய உள்ளது.குரூப் 2&2A தேர்விற்கு இதுவரை விண்ணப்பம் செய்யாதவர்கள் இன்று இரவு 11:59க்குள் விண்ணப்பம் செய்துவிடுங்கள்.

இந்த தேர்விற்கு விண்ணப்பம் செய்ய உள்ள நபர்கள் கூடுதல் விவரங்கள் பெற https://www.tnpsc.gov.in என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.பிறகு அதில் apply online என்ற ஆப்ஷனை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.