குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு? தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழக அரசின் கீழ் பல்வேறு துறைகள் செயல்பட்டு வரும் நிலையில் அத்துறைகளுக்கு வருடம் தோறும் பணி நியமனம் குறித்து தேர்வாணையம் அவ்வபோது தகவலை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றானது பரவலாக காணப்பட்ட நிலையில் எந்த ஒரு அரசு தேர்வுகளும் நடைபெறவில்லை. இதனையடுத்து குரூப் 4 தேர்வானது கடந்த ஜூலை மாதம் நடைபெற்று முடிந்து 15 லட்சம் பேர் இத்தேர்வை எழுதியதை அடுத்து ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் தற்போது வரை தேர்வு முடிவுகள் வெளிவரவில்லை.
சில தினங்களுக்கு முன்பு டிசம்பர் மாதம் இதற்கான முடிவுகள் வெளிவரும் என்று கூறப்பட்ட நிலையில், அதற்கு இடையே முதலில் 7301 காலி பணியிடங்கள் உள்ளது என கூறியதை அடுத்து தற்பொழுது கூடுதலாக 2500 காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்தனர்.
இதனால் தேர்வு எழுதியவர்கள் சற்று குழப்பத்தில் இருந்ததை அடுத்து இதற்கான முடிவுகள் எப்பொழுது வரும் என்றும் அவ்வாறு வெளிவரும் பட்சத்தில் 9870 இடங்களுக்கும் பணி நியமனம் செய்யப்படுமா என்று அடுத்தடுத்து கேள்விகள் எழுந்து வந்தது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வரும் பிப்ரவரி மாதம் குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளிவரும் என்று கூறியுள்ளனர்.முடிவுகள் வெளிவருவதையடுத்து அனைத்து காலி பணியிடங்களுக்கு பனி நியமனம் செய்யப்படுவார்களா என்பது தெரியவரும்.