முதலமைச்சர் தலைமையில் புதிய குழு!முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முக்கிய இடம் அளித்த காரணம் என்ன தெரியுமா?

0
128

நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியது. அதோடு தற்சமயம் இந்த தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு சட்ட சபையில் பங்காற்றும் கட்சிகளின் சட்டசபை உறுப்பினர்கள் உடைய ஒரு ஆலோசனைக் குழுவை தமிழக அரசு சார்பாக அமைத்திருக்கிறார்கள்.

இது குறித்து தமிழக அரசு ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருக்கிறது அதில் தமிழகத்தின் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டசபை கட்சித் தலைவர்கள் கூட்டம் சென்ற 13ஆம் தேதி அன்று தலைமைச்செயலகத்தில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் அந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அந்த தீர்மானங்களில் ஒன்றாக தீர்மானம் எண் நான்கு நிறைவேற்றப்பட்டது. இந்த நோய்த் தொற்று நோய் கட்டுப்படுத்துவதற்கு தேவையான வழிமுறைகள் தொடர்பான ஆலோசனைகளை பெறுவதற்கு சட்டசபை கட்சிகள் சார்ந்த உறுப்பினர்களை உடைய ஒரு ஆலோசனைக் குழு அமைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின்படி எல்லா சட்டப்பேரவை கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை செய்து அவர்களிடமிருந்து ஆலோசனைகள் பெற்று அதன் அடிப்படையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சட்ட சபை உறுப்பினர்களை கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

அதோடு இந்த ஆலோசனைக் குழு அவசியம் மற்றும் அவசரம் கருதி நோய் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நெறிமுறைகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான ஆலோசனைகளை பெறுவதற்கு அவ்வப்போது ஒன்று கூடி விவாதம் செய்யும். இந்த குழுவிற்கு பொதுத்துறை செயலாளர் உறுப்பினர் செயலாளராக செயல்படுவார் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்த குழுவில் மருத்துவர் எழிலன், மருத்துவர் விஜயபாஸ்கர், ஏ. எம் முனிரத்தினம், ஜிகே மணி, நயினார் நாகேந்திரன், மருத்துவர் சதன் திருமலைக்குமார், எஸ் எஸ் பாலாஜி, நாகை மாலி, ராமச்சந்திரன், கொங்கு ஈஸ்வரன், வேல்முருகன், ஜெகன்மூர்த்தி, ஜவாஹிருல்லா ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றன.

இதில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் விஜயபாஸ்கர் அவர்களை இந்த குழுவின் உறுப்பினராக நியமனம் செய்திருப்பது தான். அவர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சமயத்தில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன் காரணமாக, இந்த நோய் தொற்று தமிழகத்தில் கட்டுப்பாட்டில் இருந்தது. அதிமுக ஆட்சியில் இருந்த வரையில் கட்டுப்பாட்டிற்குள் இருந்த இந்த நோய்த்தொற்று திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஒரே வாரத்தில் நினைக்க முடியாத அளவிற்கு எகிற தொடங்கியது.

இதனை கவனித்த நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விஜயபாஸ்கர் எதிர்க்கட்சி சட்டசபை உறுப்பினர் என்றாலும் கூட பரவாயில்லை தற்போது இருக்கக்கூடிய சுகாதாரத்துறை அமைச்சரை மாற்றிவிட்டு அவரை சுகாதாரத்துறை அமைச்சராக போடுங்கள் என்ற கோரிக்கைகளை வைத்து வந்தார்கள். அது மிகப்பெரிய அளவில் வைரலாகி விவாதப் பொருள் ஆகியது. இது வைரலாகி முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு செல்ல அதன் ஒரு பகுதியாகவே தற்போது இந்த குழுவில் ஸ்டாலின் விஜயபாஸ்கரை இடம்பெற செய்திருக்கிறார் என்று சொல்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.