மே 29ல் விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி F12! இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!!

Photo of author

By Sakthi

மே 29ல் விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி F12! இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!
வரும் மே மாதம் 29ம் தேதி ஜி.எஸ்.எல்.வி F12 ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய நாட்டின் தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பு போன்றவற்றிற்கு பயன்படும் செயற்கைகோள்களை வடிவமைத்து பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி என்று செயற்கை கோள்களை வகைப்படுத்தி விண்ணில் நிலைநிறுத்தும் பணிகளை செய்து வருகின்றது.
தற்பொழுது 2232 கிலோ எடை கொண்ட என்.வி.எஸ் 01 என்ற வழிகாட்டாதல் செயற்கை கோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து இந்த செயற்கை கோள் விண்ணில் பாயவுள்ளது.
ஜி.எஸ்.எல்.வி F12 ராக்கெட்டின் உதவியுடன் மே 29ம் தேதி காலை 10.42 மணிக்கு என்.வி.எஸ் 01 செயற்கை கொள் விண்ணில் பாய்கிறது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே இஸ்ரோ நிறுவனம் ஜூலை மாதம் 12ம் தேதி சந்திராயன் 3 விண்கலத்தை ஏவப்படவுள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.