தமிழக பேருந்துக்களில் 5 வயது வரை கட்டணம் இல்லை!! அரசு அறிவிப்பு!!

தமிழக பேருந்துக்களில் 5 வயது வரை கட்டணம் இல்லை!! அரசு அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னை, மதுரை, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் 10 ஆயிரம் டவுன் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் 3 வயது வரை குழந்தைகளுக்கு பயணச்சீட்டு எடுக்க தேவையில்லை. கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம்.

தற்போது 5 வயது வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ‘பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, மாவட்ட விரைவு பஸ்களில் 3 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இருந்த அரை பயணச்சிட்டு அனுமதியும். தற்போது 5 வயது முதல் 12 வயதாக உயர்த்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு பேருந்துக்களில் இலவச பயணம் கொண்டுவரப்பட்டது.தற்போது அரசு அறிவித்த ஐந்து வயது வரை கட்டணம்  செலுத்த தேவையில்லை என்ற நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது.