21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய பைத்தியக்காரத்தனம் ஜிஎஸ்டி! பாஜக எம்.பி சுப்பிரமணியன்சாமி விலாசல்
ஐதராபாத்தில் “இந்தியா 2030 ஆம் ஆட்டுக்குள் சூப்பர் பவர்” என்ற தலைப்பிலே கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும்,ராஜ்ய சபை உறுப்பினருமான சுப்பிரமணியன் சாமி கலந்து கொண்டார்.அதில் அவர் கூறியதாவது:-
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 37 சதவீதம் முதலீடு செய்ய வேண்டும்.10 சதவீத பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் மட்டுமே இந்தியா 2030 ஆம் ஆண்டில் பொருளாதார வள்ளலரசாக மாற முடியும்.அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் நாம் சீனாவை எளிதில் பின்னுக்குத் தள்ளி அமெரிக்காவுக்கே பொருளாதாரத்தில் சவால் விட முடியும் என்றார்.
ஜிஎஸ்டி என்பது இருத்தோராம் நூற்றாண்டின் மிகப்பெரிய பைத்தியக்காரத்தனம் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற வேண்டுமானால் ஒரு தேசம் முதலீடுகளை ஈர்க்க வேண்டும்.முதலீடுகளை ஈர்க்க வதி விதிப்பும்,வசூலும் இலகுவாக இருத்தல் வேண்டும்.ஆனால் ஜி.எஸ்.டி அவ்வாறு உள்ளாறு உள்ளதா என கேள்வி எழுப்பினார்.
ஜி.எஸ்டி,வருமான வரியை கணினியில் செலுத்தச் சொல்கிறார்கள் கணியை அறியாத பல தொழில் முனைவோரும் நம்மிடையே உள்ளனர்.அவர்கள் செய்யும் தொழிலுக்கு வரி செலுத்துவதோடு மட்டும் இல்லாமல் வரிகணக்கை தாக்கல் செய்ய தனியாக செலவிட வேண்டிய சூழலுக்கு ஆளாகிறார்கள்.
மேலும் முன்னாள் பாரதப்பிரதமர் நரசிம்மராவுக்கு பாரதரத்னா வருது வழங்க வேண்டும் எனவும் கூறினார்.ஏனெனில் இந்தியாவில் அவருடைய ஆட்சியை தவிர வேறு யாருடைய ஆட்சியிலும் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்தை எட்டவில்லை.அவரே பல பொருளாதார சீர்த்திருத்தங்களை செய்த ஜாம்பவான் என்றும் குறிப்பிட்டார்.