ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் உலக புகழ் பெற்ற ஒரு இந்து புனிதலம் ஆகும். இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். மேலும் இந்த கோவிலில் இந்துகள் மட்டும் தான் வழிபட முடியும். இந்த கோவிலின் மற்றொரு பெயர் திரு அனந்த் பத்மனாபசுவாமி என்றும் அழைக்கப்படுவர். இதன் மூலவர் பகவான் மகாவிஷ்ணு கோவிலாகும். இந்த மூலவர் மூர்த்தி 12008 சாலக்கிராமத்தினாலும் கடுசர்க்கரா என்ற அஷ்டபந்தனக் கலவையால் செய்யப்பட்டு அனந்தசயன மூர்த்தி பூஜை செய்யப்பட்டது.
மேலும் இந்த கோவிலில் வணிக நிறுவன கட்டிடம் மூலம் வரும் வாடகை,டிக்கெட் வசூல், துணி விற்பனை, பவனி, காப்பக கட்டணம், புத்தகங்கள் விற்பனை, புகைப்படம் விற்பனை, யானை ஊர்வலம் ஆகியன மூலம் கோடிக்கணக்கான பணம் ஆண்டுக்கு வருவாயாக வருகிறது. இதில் சில விற்பனைகள் ஜி.எஸ்,டி-யில் வரும் சிலவற்றை வராது. அவை சரியாக செலுத்தி வந்த கோவில் நிர்வாகம் கடந்த 2017-ம் ஆண்டு முதல் வரிகளை சரியாக செலுத்தாமல் இருந்து வந்துள்ளது. இதனால் மொத்தம் ரூ.1.57 கோடி வரி கட்டாமல் இருப்பதாக ஜி.எஸ்.டி துறை நோடீஸ் அனுப்பி உள்ளது.
மேலும் அதில் விரிவாக்க பணம் செலுத்துமாறு ஜி.எஸ்.டி துறை கேட்டுள்ளது. இதற்க்கு கோவில் நிர்வாகம் தரப்பில் பதில் அனுப்பப்பட்டது. அதில் கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது வரி இல்லாத பொருள்க்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. அந்த தொகையை நீக்கி தள்ளுப்படி செய்தால் நாங்கள் வரி செலுத்துகிறோம் என்று ஜிஎஸ்டி கண்காணிப்பு அதிகாரிக்கு பதில் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர் கோவில் நிர்வாகம்.