வரி விகிதங்களை உழைப்பு ஒழுங்குபடுத்துவது தொடர்பாக மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய குழு கர்நாடக மாநில முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே 2 முறை இந்த குழு கூடி ஆலோசனை நடத்தி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், வரி விகிதத்தை மாற்றி அமைப்பது குறித்து அதிகாரிகள் குழு சமர்ப்பணம் செய்த சிபாரிசுகளை ஆய்வு செய்வதற்காக இந்த குழு இன்று கூடுவதாக இருந்தது, ஆனால் திடீரென்று இந்த குழுவின் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பால் சிறு தொழில் நிறுவனங்கள் முதல் பெரிய தொழில் நிறுவனங்கள் வரையில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கின்றன. அதோடு பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பை குறைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இருந்தாலும் இதனை மத்திய அரசு காதில் போட்டுக் கொள்வதாக தெரியவில்லை.
அவ்வாறு இருக்க தற்சமயம் இந்த அமைச்சர்கள் குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜிஎஸ்டி குறித்த அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற்றால் அதில் ஜிஎஸ்டி வரி விதிப்பை குறைப்பது குறித்து பல யோசனைகள் சொல்லப் படலாம் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் அதனை குழு ஏற்றுக் கொள்ளுமா அப்படியே குழு ஏற்றுக் கொண்டாலும், மத்திய அரசு இதனை பரிசீலனை செய்யுமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.