ஜிஎஸ்டி வரி குறைப்பு : எந்தெந்த பொருட்கள் விலை எல்லாம் குறைந்துள்ளன?

Photo of author

By Parthipan K

ஜிஎஸ்டி-க்கு முந்திய வரி ஒப்பிடுகையில் இந்தத் தருணம் குறைந்துள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மக்கள் வரி செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி விகிதத்தை தற்பொழுது குறைந்துள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அவர்களின் நினைவு நாளான இன்று ஜிஎஸ்டி புதியவரி திட்டத்தை அமல் படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். இந்நிலையில் ஜிஎஸ்டியை அமல்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்கு இன்றியமையாத ஒன்று என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இந்தியாவின் வரி விதிப்பை மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களை, ஜிஎஸ்டி வரலாற்று சிறப்புமிக்கதாக இருந்திருக்கும் என நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இத்திட்டத்தின் கீழ் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

கூந்தல் எண்ணெய், சோப்பு மற்றும் பற்பசை போன்ற பொருட்களுக்கு வரி விகிதங்கள் முந்தைய காலத்தில் 29.3 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக குறைந்துள்ளதாக கூறினார் .நாம் தினம் தினம் பயன்படுத்தப்படும் பொருட்கள் மீதான வரியை 0% இருந்து 5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.அதே நேரத்தில் அரிசி ,கோதுமை, இயற்கை தேன் ,மாவுகள் உள்ளிட்ட ஜிஎஸ்டியை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறினார். எண்ணைய் பொருட்கள் மீதான ஜீ எஸ்டியை 6% இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

https://twitter.com/mygrowingindia/status/1297831465296699392?s=19