தியேட்டரில் படம் பார்க்கலாம்..! ஆனால்..?? வெளியாகியுள்ள அறிவிப்பு!

Photo of author

By Parthipan K

திரையரங்குகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவித்து வந்த நிலையில், திரையரங்குகளை திறக்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இது திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திரையரங்குகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

  • திரையரங்கின் நுழைவாயிலில் மக்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும்.
  • பார்வையாளர்கள் திரையரங்கிற்குள் செல்லும் போது சானிடைசர் வழங்கப்பட வேண்டும்.
  • திரையரங்கிற்கு வரும் அனைவருக்கும் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
  • திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து படம் பார்க்க அனுமதிக்க வேண்டும்.
  • ஒவ்வொரு இருக்கைக்கும் நடுவே ஒரு இருக்கை இடைவெளிவிட்டு பார்வையாளர்களை அமரவைக்க செய்ய வேண்டும்.
  • கூட்டத்தை தடுக்க டிக்கெட் விற்பனை கவுண்டர்கள் நாள் முழுவதும் திறந்து வைக்க வேண்டும்.
  • இடைவேளையின் போது பார்வையாளர்கள் இருக்கைகளை விட்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.
  • ஆன்லைன் டிக்கெட் மூலம் முன்பதிவு செய்ய பார்வையாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
  • ஒவ்வொரு காட்சிக்கு பிறகும், திரையரங்கு முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
  • திரையரங்குகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் உள்ளே செல்வதையும், வெளியே வருவதையும் உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு திரைப்பட காட்சிக்கும் இடையே கால இடைவெளி இருக்க வேண்டும்.
  • திரையரங்குகளில் இணைய வழி, இ-வாலட், க்யூ.ஆர். குறியீடு மூலம் கட்டணம் செலுத்தும் முறையை ஊக்குவிக்க வேண்டும்.
  • கொரோனா அறிகுறி இருந்தால் திரையரங்கிற்குள் அனுமதிக்க கூடாது.
  • கட்டுப்பாடு மண்டலங்களில் இருக்கும் திரையரங்குகளை திறக்க அனுமதி இல்லை.