மாணவிகளுக்கு மாதவிடாய் சோதனை நடத்திய விவகாரம்: கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்

0
138

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் சோதனை நடத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்த கல்லூரியின் முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மாதவிடாய் காலத்தின் போது மாணவிகள் கல்லூரி வளாகத்திற்கு அல்லது உணவகத்திற்கு செல்லக்கூடாது என்றும் பிற மாணவிகளை தொட்டுப் பேசக்கூடாது என்றும் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டதாக கூறப்பட்டது

இந்த நிலையில் சமீபத்தில் 68 மாணவிகளின் உள்ளாடையை கழட்டி தவிடாய் இருக்கிறதா என சோதனை செய்ததாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்த செய்திகள் பரபரப்பாக வெளிவந்த நிலையில் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. முதல்கட்டமாக இந்த கல்லூரியின் முதல்வர் மற்றும் விடுதி காப்பாளர் ஆகிய இருவரும் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் இருவரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விசாரணைக்கு பின்னர் இருவரும் குற்றமற்றவர் என தெரிய வந்தால் மட்டுமே மீண்டும் அவர்கள் பணியில் சேர அனுமதிக்கப்படுவார்கள் என்று வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Previous articleகாதலியை ஏமாற்ற நினைத்த காதலன்! காவல் நிலையத்தில் வைத்து டும் டும் டும்..!!
Next articleஅமெரிக்க அதிபருக்கு சிலை வைத்து பூஜை நடத்திய இளைஞர்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!