பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்பில் களமிறங்கும் குஜராத்!! பெங்களூரு அணியுடன் இன்று பலப்பரீட்சை!!
நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று(மே4) நடக்கும் லீக் சுற்றில் பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்பில் சுப்மான் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் விளையாடுகின்றது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 51 லீக் சுற்றுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 வெற்றிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் ஆகிய அணிகள் அடுத்தடுத்து இடத்தில் உள்ளது. இதையடுத்து சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இன்றைய(மே4) போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம்.
முன்னாள் சேம்பியனும் கடந்த வருடம் ரன்னர் அப் ஆக இருந்த குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடரில் தட்டு தடுமாறி விளையாடி வருகின்றது. குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடியுள்ள 10 போட்டிகளில் 4 வெற்றிகள் பெற்று 6 போட்டிகளில் தோல்வியை பெற்றுள்ளது.
இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி எஞ்சியுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றது. 4 போட்டிகளில் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தாலும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு கடினம்தான்.
அதே போல ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறுவதற்கான கடைசி கட்டத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 போட்டிகளில் 3 வெற்றிகள் பெற்று 7 தோல்விகள் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கின்றது. எஞ்சிய நான்கு போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கட்டாயமாக வெற்றி பெற்றே ஆக வேண்டும். மேலும் மற்ற அணிகளின் வெற்றி மற்றும் தோல்வி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை முடிவு செய்யும்.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பிளே ஆப் சுற்றை குறி வைத்து இன்றைய(மே4) போட்டியில் விளையாடும் என்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டி இன்று(மே4) இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.