பெண்களை நிர்வாணப்படுத்தி சோதனை – மீண்டும் குஜராத்தில் ஒரு சர்ச்சை !

0
191

பெண்களை நிர்வாணப்படுத்தி சோதனை – மீண்டும் குஜராத்தில் ஒரு சர்ச்சை !

குஜராத் மாநிலம் சூரத்தில் முனிசிபல் கார்பரேஷனில் வேலை செய்யும் கிளார்க் பெண்களை நிர்வாணமாக நிறுத்தி அவர்களுக்குக் கருத்தரிப்பு சோதனை நடத்தியது சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது.

கடந்த வாரம் குஜராத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் 68 மாணவிகளின் உள்ளாடையை கழட்டி மாதவிடாய் இருக்கிறதா என சோதனை செய்ததாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்த செய்திகள் பரபரப்பாக வெளிவந்த நிலையில் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. முதல்கட்டமாக இந்த கல்லூரியின் முதல்வர் மற்றும் விடுதி காப்பாளர் ஆகிய இருவரும் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் இருவரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த சர்ச்சை முடிவதற்குள் இப்போது  இதேப் போன்ற புது சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது. அதுவும் அதே குஜராத்தில் இருந்தே.

குஜராத் மாநிலத்தில் சூரத் நகரத்தின் முனிசிபல் கார்பரேஷனில் வேலை பார்க்கும் 10 க்கும் மேற்பட்ட பெண் கிளார்க்குகளை அவர்களின் பயிற்சிக் காலம் முடிந்ததும் நிர்வாணமாக நிற்கவைத்து அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா என்ற சோதனையை செய்துள்ளனர். இதில் மேலும் கொடுமை என்னவென்றால் திருமணமாகவில்லை என்று சொன்ன பெண்களையும் இந்த சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் சூரத் முனிசிபல் கார்ப்பரேஷன் ஊழியர்கள் சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த சூரத் ஆணையர் பன்ச்சாநிதிபானி உத்தரவிட்டுள்ளார். 

Previous articleநான் தாம்ப்பா பைக் திருடன்: நல்லவங்களை மக்கள் புரிஞ்சுப்பாங்க ஆனா கொஞ்சம் லேட் ஆகும்!
Next articleதமிழ் மொழியை நேசிக்கும் சிறுவர்கள்! இணையத்தில் வைரலாகும் ‘அ’ புகைப்படம்..!!