குணசேகரன் கதாப்பாத்திரத்திற்கு பதிலாக புதிய கதாப்பாத்திரம்!!! விருப்பம் இல்லாததால் இந்த முடிவை எடுத்துள்ள எதிர்நீச்சல் குழு!!!!

0
69
#image_title

குணசேகரன் கதாப்பாத்திரத்திற்கு பதிலாக புதிய கதாப்பாத்திரம்!!! விருப்பம் இல்லாததால் இந்த முடிவை எடுத்துள்ள எதிர்நீச்சல் குழு!!!!

மறைந்த நடிகர் மாரிமுத்து அவர்கள் நடித்து வந்த குணசேகரன் கதாப்பாத்திரத்திற்கு வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க விருப்பம் இல்லாத எதிர்நீச்சல் குழு தற்பொழுது புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோலங்கள் என்ற மெகாத்தொடரை எடுத்து ஹிட் கொடுத்த இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் தற்பொழுது எதிர்நீச்சல் தொடர்பு சன் டிவி தொலைக்காட்சியில் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகின்றது. எதிர்நீச்சல் தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து அவர்கள் ஆதி குணசேகரன் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்து வந்தார். 30 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் கிடைக்காத சந்தோஷத்தை நடிகர் மாரிமுத்து அவர்கள் எதிர்நீச்சல் தொடர் முலம் அடைந்தார்.

ஆனால் அந்த சந்தோஷத்தை முழுவதும் அடையாமல் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு தமிழ் சினிமா திரையுலகில் பெரும் அதிச்சியை அளித்தது. திரையுலகின் பலரும் மாரிமுத்து அவர்களுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

மறைந்த நடிகர் மாரிமுத்து அவர்கள் நடித்து வந்த குணசேகரன் ரோலில் நடாப்பதற்கு வேல ராமமூர்த்தி அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் நடிகர்கள் ராதாரவி, பசுபதி ஆகியோய்களிர் பெயர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்று உள்ளது. ஆனால் இன்னும் யாருடைய பெயரும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையால் எதிர்நீச்சல் சீரியல் குழு தரப்பில் இருந்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது ஆதி குணசேகரன் வீட்டை விட்டு சென்று விட்டார் என்பதோடு ஆதிகுணசேகரன் கதாப்பாத்திரத்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய கதாப்பாத்திரத்தை எதிர்நீச்சல் சீரியலில் கண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.

இதையடுத்து எதிர்நீச்சல் சீரியலில் புதிதாக வரவுள்ள கதாப்பாத்திரத்தின் பெயர் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன்படி எதிர்நீச்சல் சீரியலில் மறைந்த நடிகர் மாரிமுத்து அவர்களின் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் பதிலாக “ஆதி பகவன்” என்ற கதாப்பாத்திரத்தை கொண்டு வருவதற்கு சீரியல் குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.