குரு பகவான் கொடுக்கும் யோகங்களின் சிறப்பம்சங்கள்!

குரு பகவான் கொடுக்கும் யோகங்களில் குறிப்பிடத்தக்க யோகங்கள் 5 வகைப்படும், கஜகேசரி யோகம், குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம், ஹம்ச யோகம், சகட யோகம், உள்ளிட்டவையாகும் தற்போது அவை தொடர்பான விளக்கத்தை பார்க்கலாம்.

கஜகேசரியோகம்– குரு சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது 4, 7, 10 உள்ளிட்ட இடங்களில் இருந்தால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தை பெற்றவர்கள் செல்வம், செல்வாக்கு, வீடு, வாகனம், உயர்ந்த பதவி, உள்ளிட்டவற்றை பெற்றவர்களாக விளங்குவார்கள்.

குருச்சந்திரயயோகம் குரு சந்திரனுக்கு 1,5,9 உள்ளிட்ட இடங்களில் இருந்தால் குருசந்திர யோகம் ஏற்படுகிறது. இந்த யோகத்தை பெற்றவர்கள் புகழ்மிக்கவர்களாகவும், நல்ல அந்தஸ்து படித்தவர்களாகவும், இருப்பார்கள்.

குருமங்கள யோகம் குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படும். இந்த யோகத்தை பெற்றவர்கள் வீடு, இடம், வாகனம், உள்ளிட்டவற்றை அதிகம் வாங்கி மகிழ்ச்சியடையும் வாய்ப்புண்டு

ஹம்சயோகம் சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு உச்சம் பெற்றால் இந்த யோகம் ஏற்படுகிறது. நல்ல உடலமைப்பு ஒழுக்கமான வாழ்க்கையும் இருப்பவர்களாக இந்த யோகத்தில் பிறந்தவர்கள் திகழ்வார்கள்.

சகட யோகம் குருவுக்கு 6,8,12 உள்ளிட்ட இடங்களில் சந்திரன் நின்றால் சகட யோகம் ஏற்படும். இந்த யோகத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை வங்கி வண்டிச்சக்கரம் போல இன்பமும், துன்பமும், கலந்திருக்கும்.

Leave a Comment