நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவானுக்கு ஜோதிட நூல்களில் முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது.
ஜாதகப்படி குரு பார்வை பட்டால் தான் திருமணம், குழந்தை செல்வம், சிறந்த பதவி, செல்வ சிறப்பு உள்ளிட்டவை ஏற்படும்.
சுய ஜாதகத்தில் குரு நல்ல இடத்தில் இல்லாமல் இருந்தாலோ, கொடூரமானவராக இருந்தாலும் கோச்சார ரீதியாக கெட்டவராக இருந்தாலும் குரு தோஷம் நீங்க பரிகாரம் செய்ய வேண்டும்.
வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து பூஜிக்க வேண்டும், தட்சணாமூர்த்தியை வழிபட வேண்டும் என்று ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.
தட்சணாமூர்த்தி தரிசனம் செய்து, பூஜித்து தியானம் செய்து, அர்ச்சனை உள்ளிட்டவை செய்து வந்தால் குரு தோஷம் நீங்கும் என்று சூரியனார் கோவில் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குரு பகவானுக்கு வியாழக்கிழமையில் விரதம் இருந்து அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற வஸ்திரம், புஷ்பராகமணி, வெண் முல்லை உள்ளிட்டவற்றால் அலங்கரிக்கப்பட்ட குருபகவானை வணங்க வேண்டும். அரச மர சமித்துகளால் ஹோமம் செய்து கடலை பொடி அன்னத்தால் அல்லது எலுமிச்சை ரச அன்னத்தால் ஆகுதி செய்து வேள்வியை முடிக்க வேண்டும்.
கொண்டைக்கடலையில் அவருக்கு மாலை அணிவிக்க வேண்டும். குரு கீர்த்தனைகளை அடானா ராகத்தில் பாடி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இவற்றால் குரு தோஷம் நீங்கும்.