குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள் – 2021 மீனம்
மகரத்தில் இருந்து அதிசாரமாக கும்ப ராசிக்கு சென்றுள்ள குரு பகவான் 21 – 6 – 2021 ல் வக்கிரம் ஆகி, 18 – 10 2021 ல் வக்கிர நிவர்த்தி அடைகிறார்.
அதேபோல் கடந்த 23-5-2021 ல் மகரத்தில் வக்ரம் ஆன சனி பகவான், 11-10-2021 ல் வக்கிர நிவர்த்தி அடைகிறார்.
எனவே, குரு மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களின் வக்ர கதியை கணக்கில் கொண்டே, ஒவ்வொரு ராசிக்கும் பலன்களை அறிய வேண்டும்.
அந்த வகையில், மீன ராசிக்கு பனிரண்டாம் இடமான கும்ப ராசிக்கு அதிசாரமாக வந்துள்ள குரு, தற்போது வக்கிரம் அடைந்துள்ளார்.
பொதுவாக பனிரண்டாம் இடத்தில் உள்ள குரு பொதுவாக சுப பலன்களை வழங்க மாட்டார். குறிப்பாக அனைத்திலும் செலவுகள் மற்றும் விரயத்தை ஏற்படுத்தி இருப்பார்.
ஆனால், தற்போது பனிரண்டாம் இடத்தில் வக்கிரம் அடைந்துள்ள குரு நிச்சயம் நல்ல பலன்களை வழங்குவார்.
அதன்படி, பனிரண்டாம் இடத்தில் இருந்த குரு ஏற்படுத்திய தேவை இல்லாத செலவுகள் மற்றும் விரயங்களை வக்கிர குரு கட்டுப்படுத்துவார்.
உணவு அருந்துவதிலும், தூங்குவதிலும் கவனம் செலுத்த வைத்துள்ள குரு, தற்போது வக்கிரம் ஆகி, சோம்பலை அகற்றி, சுறுசுறுப்புடன் இயங்க வைப்பார்.
மருத்துவ செலவுகள், பயண செலவுகள், அவசியம் இல்லாத செலவுகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
குருவின் ஐந்தாம் பார்வை ராசியின் நான்காம் இடத்துக்கு கிடைப்பதால், வீடுகள், மனைகள் மற்றும் வாகனங்கள் வாங்குவதில் இருந்த தடைகள் நீங்கும். வீடு மற்றும் வாகனங்களை புதுப்பிக்கும் பணிகள் தொய்வு இல்லாமல் நடக்கும்.
குருவின் ஏழாம் பார்வை, ராசிக்கு ஆறாம் இடத்தில் விழுவதால், எதிர்பார்த்த இடங்களில் இருந்து கடன்கள் கிடைக்கும். போட்டி மற்றும் பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். மருத்துவ செலவுகள் கட்டுக்குள் இருக்கும். அரசாங்கத்தின் மூலம் நல்ல அனுகூலங்கள் கிடைக்கும். இதுவரி எதிர்வினை ஆற்றியவர்கள் இனி அடங்கி போகும் நிலை உருவாகும்.
குருவின் ஒன்பதாம் பார்வை ராசியின் எட்டாம் இடத்திற்கு கிடைப்பதால், இதுவரை இழுபறியாக இருந்து வரும் வழக்குகள் முடிவுக்கு வரும். வங்கி டெபாசிட், காப்பீடு தொகைகள் முதிர்வடைந்து கைக்கு கிடைக்கும். மறைமுக வருவாய்களும் கிடைக்கும்.
பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. எத்ரிபாராத திடீர் பணவரவுகளும், சொத்துக்களும் சிலருக்கு கிடைக்கும். எப்போதோ செய்த உதவியின் பலன் இப்போது சிலருக்கு கிடைக்கும். வக்கிர குருவை போல, வக்கிர சனியின் பலன்களை அறிந்துகொள்ள வேண்டியதும் அவசியமாகும்.
அதன்படி, மீன ராசிக்கு பதினோராம் இடத்தில் இருந்த சனி பல்வேறு லாப வாய்ப்புக்களை வழங்கி இருப்பார். அப்படி வழங்கவில்லை என்றால், வக்கிர காலத்தில் அதை வழங்குவார்.
மூத்த சகோதர, சகோதரி வழியில் சிக்கல் இருந்தால், அது முடிவுக்கு வரும். அவர்களால் சில உதவிகளும் கிடைக்கும். தொழிலில் லாபம் பெருகும்.
சனியின் மூன்றாம் பார்வை ராசியின் மீது விழுவதால், இதுவரை உடல் மற்றும் முகத்தின் மீது அக்கறை இல்லாமல் இருந்தவர்கள், அதன் மீது அக்கறை கொள்ள தொடங்குவார்கள்.
சோம்பல் மற்றும் விரக்தியுடன் இருந்தால், அந்த நிலை மாறி புத்துணர்ச்சியும், புதிய நம்பிக்கையும் பிறக்கும்.
ஆடை, அணிகலன்கள் மற்றும் வாசனை திரவியங்கள் மீது மோகம் அதிகரிக்கும்.
சனியின் ஏழாம் பார்வை ராசியின் ஐந்தாம் இடத்தின் மீது விழுவதால், பிள்ளைகள் மற்றும் அவர்களது கல்வி பற்றி கவலை கொண்டவர்கள், அதை மாற்றிக்கொள்வார்கள். ஏனென்றால் பிள்ளைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் கிட்டும்.
மனதில் இதுவரை அடங்கி இருந்த ஆசைகள் ஒவ்வொன்றும் வெளிவர தொடங்கும். அவற்றை நிறைவேற்றுவதற்கான வசதி வாய்ப்புகளும் கிடைக்கும். புதிய படிப்புகளின் மீது மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும்.
சனியின் பத்தாம் பார்வை, ராசிக்கு எட்டாம் இடத்தின் மீது விழுவதால், நீண்டகால பிரச்சினைகள், நோகள், எதிர்ப்புகள் போன்றவை முடிவுக்கு வரும்.
கிடைக்காது என இதுவரை நினைத்த பூர்வீக சொத்துக்கள் சிலருக்கு திடீரென கிடைக்கும். சேமித்து வைத்த பணம், நகைகள், சொத்துக்கள் போன்றவை உபயோகத்துக்கு வரும்.
இதுவரை, கோச்சார குரு மற்றும் சனியால் பாதிப்புகளை சந்தித்து இருந்தால், அது வக்கிர குரு மற்றும் வக்கிர சனியால், முடிவுக்கு வரும். அதனால், கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
பொதுவாக, ஒருவரது ஜென்ம ஜாதகத்தில் வக்கிரமாக இருக்கும் கிரகம், கோச்சாரத்தில் வக்ரம் ஆகும்போது, அந்த ஜாதகருக்கு, நல்ல பலன்களை தரும் என்பது ஜோதிட விதியாகும்.
ஜென்ம ஜாதகத்தில் வக்கிரம் அடையாத கிரகங்கள், கோச்சாரத்தில் வக்கிரம் அடையும்போது, பெரிய அளவில், நல்ல பலன்களை தருவதில்லை.
எனவே, வக்கிர குரு மற்றும் வக்கிர சனியின் பலன்கள் அவரவர் தனிப்பட்ட ஜாதகத்தை பொறுத்து மாறுபடும்.
மற்ற ராசிகள்:
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 மேஷம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 ரிஷபம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 மிதுனம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 கடகம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 சிம்மம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 கன்னி
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 துலாம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 விருச்சிகம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 தனுசு
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 மகரம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 கும்பம்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வக்கிர குரு மற்றும் வக்கிர சனியின் முழு பலன்களை காண கீழுள்ள வீடியோ பதிவை கிளிக் செய்து பார்க்கவும்.
https://www.youtube.com/watch?v=ZdJlicZmZn4