ஆண்களே உஷார்! ஆண்களை மட்டும் குறிவைத்து தாக்கும் கொரோனா!

Photo of author

By Rupa

ஆண்களே உஷார்! ஆண்களை மட்டும் குறிவைத்து தாக்கும் கொரோனா!

கொரோனா தொற்றானது ஓராண்டு காலம் பரவ ஆரம்பித்தும் இன்றும் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது.சில மாதம் கட்டுபாட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிட்டது.முன்பை விட அதி விரைவில் பரவுகிறது.கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்தும் போடப்பட்டு வந்த நிலையிலும் இதைக் கட்டுபடுத்த முடியவில்லை.அந்தவகையில் இந்தியாவில் அதிகபடியானோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதால் இந்தியாவிலிருந்து நியூசிலாந்திற்கு வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசாங்கம் தடை விதித்துள்ளது.

தற்போது இந்தியாவில் தமிழ்நாடு,கேரளா,மகாராஷ்டிரா என முக்கிய மாநிலங்களில் அதிக அளவு தொற்று பரவி வருகிறது.அந்தவகையில் குஜராத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள முக்கிய நகரங்களில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது.அதனைத்தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் கொரோனா தொற்று அதிகமா காணப்படுவதால் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது.அந்தவகையில் தமிழ்நாட்டிற்கும் ஊரடங்கு போடப்படும் என பேசி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சென்னை நகரத்தில் இந்த கொரோனா ஆண்களை மட்டும் குறிவைத்து தாக்குவதாக அம்மாநகராட்சி தெரிவித்துள்ளது.சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,57,851 ஆக உள்ளது.சென்னையில் மட்டும் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,685 பேராக உள்ளனர்.

சென்னைக்கு தற்போது வெளி மாநிலங்களிலிருந்து வந்த 24,684 விமானங்களில் பயணம் செய்த பயணிகளை பரிசோதனை செய்ததில் 425 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.சென்னையில் மட்டும் அதிகமாக 30 முதல் 35 வயதினர்  கொரோனா தொற்றால் 20.14 சதவீதமாக உள்ளது.

40 முதல் 45 வயதினர் கொரோனாவால் பாதித்தவர்களின் சதவீதல் 18.37,50, 59 வயதினர் வரை கொரோனாவால் பாதித்தவர்களின் சதவீதம் 17.97,20 முதல் 29 வயது வரை கொரோனாவால் பாதித்தவர்களின் சதவீதம் 17.93,60 முதல் 69 வயது வரை கொரோனாவால் பாதித்தவர்களின் சதவீதம் 11.13.9 வயதுக்கும் உட்பட்ட குழந்தைகள் 1.60 சதவீதம் பேர் பாதிப்படைந்துள்ளனர்.மொத்தமாக ஆண்கள் மட்டும் 59.71 சதவீதம் பாதிப்படைந்துள்ளனர்.பெண்கள் 40 % பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.