முடி உதிர்தல் என்பது ஆண்,பெண் இருவருக்கும் ஏற்படக் கூடிய பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கின்றது.மூன்றில் ஒரு பங்கு மக்கள் முடி உதிர்வு பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.ஒரு நபர் நாளொன்றில் சுமார் 100 முடி வரை இழக்கிறார் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.
முடி உதிர்வு ஏற்படக் காரணங்கள்:-
1)பராமரிப்பின்மை
2)முடி வறட்சி
3)ஹார்மோன் பிரச்சனை
4)கெமிக்கல் பொருட்கள் பயன்படுத்துதல்
5)ஸ்ட்ரஸ்
6)தூக்கமின்மை
7)உடல் சூடு
8)ஊட்டச்சத்து குறைபாடு
பெண்களை விட ஆண்கள் தான் முடிஉதிர்வு பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.பெண்களை போன்று ஆண்கள் தங்கள் தலைமுடியை பராமரிப்பதில்லை.இதனால் இளம் வயதிலேயே வழுக்கை பிரச்சனைக்கு ஆளாகுகின்றனர்.எனவே கீழே கொடுப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி வந்தால் முடி உதிர்தல்,இளம் வயது வழுக்கை உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்ய முடியும்.
வாரம் ஒருமுறை தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளிப்பதை கட்டாயமாக்கி கொள்ளவும்.இதனால் உடல் சூடு தணிந்து முடி உதிர்தல் நிற்கும்.
தினமும் இரவு தலைக்கு தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து காலையில் தலைக்கு குளித்து வரலாம்.சீகைக்காய்,அரப்பு போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி தலையை சுத்தம் செய்யலாம்.
ஆரோக்கியமான உணவுமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் தலை முடியின் ஆரோக்கியம் மேம்படும்.
சூடான நீரில் குளிக்காமல் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.இதனால் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.
வெள்ளை முடியை கருமையாக்க கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்தாமல் இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.
தினமும் நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்க வேண்டும்.மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்ச்சியாக இருந்தால் ஸ்ட்ரஸ் ஏற்படாமல் இருக்கும்.இதனால் முடி உதிர்தல்,வழுக்கை உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.