கிராமப்புற பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த மகளிர் சுய உதவிக் குழுவின் பங்கு இன்றியமையாதது.நமது இந்தியாவில் மொத்தம் ஒரு கோடியே இரண்டு லட்சம் சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகிறது.இதில் பன்னிரெண்டு சதவீதம் ஆண்களால் இயக்கப்படும் சுய உதவிக் குழுவாகும்.
மகளிர் சுய உதவிக் குழுவிற்கு வழங்கப்படும் வட்டியில்லா கடன்கள்,சலுகைகள் போன்று ஆண்கள் சுய உதவிக் குழுக்களுக்கும் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.ஆண்கள் தங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தி கொள்வதற்காக அமைக்கப்படும் ஒரு குழுவாகும்.ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு இப்படி ஒரு சுய உதவிக் குழு இருக்கிறது என்பதே தெரியவில்லை.அதிகபட்சம் 20 நபர்கள் உறுப்பினராக சேர்ந்து ஒரு குழுவை உருவாக்க முடியும்.
மத்திய மற்றும் மாநில அரசு சுய உதவிக் குழுக்களுக்கு என்று பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.சுய உதவிக் குழுக்களால் ஏராளமான தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.சிறப்பாக செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்களுக்கு தேசிய வாழ்வாதார திட்டத்தின் கீழ், ரூ.10 ஆயிரம் வீதம் மானிய நிதி வழங்கப்படுகிறது.
அதேபோல் சுய வேலை வாய்ப்பு தனிநபர் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுவில் நபர் ஒருவருக்கு எவ்வித ஆவணமும் இன்றி அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.
அதேபோல் சுய வேலை வாய்ப்பு தனிநபர் திட்டத்தின் கீழ் 10 நபர்களைக் கொண்டு இயங்கி வரும் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வரை வட்டியில்லா வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வட்டியில்லா கடன் கிடைக்கும்.இந்த வட்டியில்லா கடனை அடுத்த ஒரு வருடத்திற்குள் செலுத்தி விட வேண்டும்.