கோலிவுடல் இயக்குனராக முதன் முதலில் காலடி எடுத்து வைத்தவர். இப்பொழுது இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மாறி வருகிறார்.
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி தான் இன்று பாலிவுட்டில் இயக்குனராக வளம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜவான் திரைப்படம் வட மாநிலங்களில் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றாலும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. அடுத்ததாக அவர் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கமல் ஹாசனையும், சல்மான் கானையும் வைத்தும்கூட ஒரு படம் இயக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜவான் படத்திற்கு இசையமைக்க இயக்குனர் அட்லி அவர்கள் அனிருத்தை தேர்ந்தெடுத்து இருந்தார். இந்த காம்போ வெற்றி பெற்ற நிலையில், அனிருத் பாலிவுட்டில் என்ட்ரி ஆகி அடுத்தடுத்து சில ஹிந்தி படங்களில் கமிட்டாகியிருப்பதாக தகவல்களும் வெளியாகி உள்ளன.
அமரன் பட விழாவில் சிவகார்த்திகேயன் அட்லி குறித்து பேசியதாவது :-
ஜிவி பிரகாஷை எனக்கு ஆரம்பத்திலிருந்தே தெரியும். ஒருமுறை நானும், சதீஷும் ஜிவியிடம் சென்று எங்கள் நண்பர் அட்லீ என்று ஒருவர் பயங்கரமாக ஒரு கதை செய்திருக்கிறார் கேட்டுப்பாருங்கள் என்று சொன்னோம். சரி என்று சொன்னார். அடுத்த நாள் சென்று ஒரு சீனை பயங்கரமாக செய்திருக்கிறார் என்றோம். சரி என்றார். அடுத்த நாள் சென்று இன்றைக்கு காமெடி சீனும் செமயாக வந்திருக்கிறது. நாங்கள் ஒர்க் செய்திருக்கிறோம் என்று சொன்னோம்.
இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று கூற ஒரு நாள் திடீரென கடுப்பான ஜிவி பிரகாஷ் அவர்கள், ” டேய் யாரு டா அந்த அட்லீ. கூட்டிட்டு வாங்கடா கதை கேட்கிறேன். ரொம்ப பில்டப் கொடுக்காதீங்க ” என்று கூறிவிட்டார்.
அதன் பின்னர் இயக்குனர் அட்லி அவர்கள் ஜிவி பிரகாசிடம் கதையை கூறி, இப்பொழுது இவர்கள் இருவரும் இணைந்து படம் ஒன்றினை உருவாக்கி வருகின்றனர் என்றும் சிவகார்த்திகேயன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.