கார்த்தி & ராஜு முருகன் இணையும் படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்!

0
243

கார்த்தி & ராஜு முருகன் இணையும் படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்!

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்துக்கு ஜப்பான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. அடுத்து  சர்தார் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.. ஒரே ஆண்டில் இதுபோல மூன்று படங்கள் கார்த்திக்கு ரிலீஸ் ஆனதே இல்லை. அதிலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கும் படமாக அமைந்துள்ளது.

இந்த படங்களை அடுத்து கார்த்தியின் 25 ஆவது படத்தை இயக்குனர் ராஜு முருகன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியகி வருகின்றனர். கார்த்தியின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ் ஆர் பிரபு மற்றும் எஸ் ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்த விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பார் என சொல்லப்பட்டது. இதற்கான இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் இப்போது படத்தில் இருந்து விஜய் சேதுபதி வெளியேறி விட்டதாக சொல்லப்படுகிறது.

ஜப்பான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் பொன்னியின் செல்வன் ரிலீஸுக்கு பிறகு அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இசையமைப்பாளராக ஜி வி பிரகாஷ் இணைந்துள்ளார். இவர் இசையில் சில பாடல்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. கார்த்தி நடித்து விரைவில் ரிலீஸ் ஆக உள்ள சர்தார் திரைப்படத்துக்கும் ஜி வி பிரகாஷ் தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஅரசுப் பணியில் இருந்து நிரந்தர நீக்கம்… சிறையில் நோட்டீஸை வாங்க மறுத்த சவுக்கு சங்கர்
Next articleஉள்ளூர் வேலை! இன்னும் இரண்டு நாள் தான் ! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!