மீண்டும் மூலப் பத்திர விவகாரத்தை கிளப்பும் H ராஜா! கடும் கோபத்தில் திமுகவினர்

Photo of author

By Anand

மீண்டும் மூலப் பத்திர விவகாரத்தை கிளப்பும் H ராஜா! கடும் கோபத்தில் திமுகவினர்

சமீபத்தில் சென்னையில் நடைபெற்று முடிந்த துக்ளக் பத்திரிக்கையின் பொன்விழாவில் பத்திரிக்கை ஆசியரான மறைந்த சோவின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.அவர் இந்த விழாவில் கலந்து கொள்வதாக அறிவித்த போதே அது அரசியலாக பேசப்பட்டது. இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த மாதிரியே அவர் பேச்சு தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

அதாவது விழாவில் கலந்து கொண்டு ரஜினிகாந்த் பேசிய போது,1971 ஆம் ஆண்டு உடை இல்லாமல் இருக்கும் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார் என்று குறிப்பிட்டார்.  மேலும் அன்றைக்கு அதை யாரும் துணிந்து பத்திரிகையில் பதிவு செய்யவில்லை என்றும், ஆனால்,துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியரான ‘சோ’ அதை அட்டைப்படத்தில் போட்டுக் கடுமையாகக் கண்டித்தார் என்றும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதிக்கு இது சிக்கலை ஏற்படுத்தியது. இதனால் இந்த செய்தியை வெளியிட்ட துக்ளக் பத்திரிக்கையை ரத்து செய்தார்கள். ஆனால் இதனைக்கண்டு கொஞ்சமும் சளைக்காமல் மீண்டும் அச்சடித்து பிளாக்கில் பத்திரிக்கையை சோ வெளியிட்டார். இதனையடுத்து அப்புத்தகம் பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனையானது. இதன் மூலமாக பத்திரிக்கை உலகில் சோ மிகவும் பிரபலமானார் என்றும் நடிகர் ரஜினிகாந்த் அந்த விழாவில் பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த் பேசிய இந்த கருத்துக்கு பலர் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து வந்தனர். குறிப்பாக பெரியார் கொள்கையை பின்பற்றுபவர்கள் நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று தனது போயஸ்தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து இதற்காக விளக்கம் அளித்தார். அதில் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும், பேசிய கருத்து உண்மை என்றும் அதற்கான ஆதாரத்தை காட்டி உறுதியாக கூறினார்.

https://twitter.com/HRajaBJP/status/1219502975237808129

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பேச்சு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, ரஜினிகாந்த் அவர்கள் தான் தெரிவித்த கருத்துக்கு ஆதாரமாக பத்திரிக்கை செய்தியின் நகலைக் காட்டியதற்கு திக வினர் ஒரிஜினலை காட்டச் சொல்கின்றனர். முதலில் நீங்கள் முரசொலி இட மூலப்பத்திரத்தை காட்டுங்கள் என திமுகவையும், திராவிடர் கழகத்தை ஒட்டு மொத்தமாக விமர்சனம் செய்துள்ளார்.

ஏற்கனவே இவர் திராவிடர் கழகத்தினரின் மிரட்டல்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கவலைப்பட தேவையில்லை என்றும், பெரியார் குறித்து ரஜினிகாந்த பேசிய விவகாரத்தில்அவர் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது” என்று கூறியிருந்தார்.H.ராஜாவின் இந்த கருத்துக்கு திமுக மற்றும் திகவினர் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதில், ராஜா அவர்களே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அனைத்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது  உங்களிடம் ஏதேனும் ஆவணங்கள் இருந்தால் நீங்கள் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் இந்திய அளவில் அதிக பொய் செய்திகளை உருவாக்கி பரப்புவது பாஜக மற்றும் மோடி ஆதரவாளர்கள் தான் என்றும், இதை ஒரு தனியார் தொலைக்காட்சி ஆய்வறிக்கையில் கூறியுள்ளது என்றும் பதிலடியாக கூறி விமர்சித்து வருகிறார்கள். 

நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆரம்பித்து வைத்த இந்த முரசொலி அலுவலகத்தின் மூலப் பத்திர விவகாரம் திமுகவினருக்கு பெரும் சோதனையாக அமைந்துள்ளது.