ஸ்டாலின் முன் ஜாமீன் எடுத்து கொள்வது நல்லது – H ராஜா

0
123

பாஜகவை சேர்ந்த H ராஜா சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பிரபலமானவர். சமீக காலமாக தமிழகத்தில் தங்கள் கட்சியின் ஒரே எதிரியாக பாவிக்கப்படும் திமுக பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

நேற்று காரைக்குடியில் செய்யார்களுக்கு அளித்த பேட்டியில் திமுகவை தமிழகத்தை பிடித்த கொரோனா வைரஸ் என விமர்சித்துள்ளவர் பேசியதாவது :_

“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன் ஜாமீன் எடுத்து வைத்துக்கொண்டால் நல்லது. ஏனென்றால் முரசொலி அலுவலகம் மூலப்பத்திரம் பிரச்சனை உள்ளது. ஸ்டாலினுக்கு பட்டியல் சமூகத்தின் மீது நவீன தீண்டாமை உள்ளது

திமுக தமிழகத்தை பிடித்த கொரோனா வைரஸ். இதை முழுமையாக ஒழிக்காமல் தமிழகத்தில் எந்த சமுதாயமும் மரியாதையாக நடமாட முடியாது. திமுகவினர் அவ்வளவு மோசமான தீயசக்திகள். பட்டியல் சமூகத்தைப் பற்றி R.S.பாரதி பேசியதாக நான் நினைக்கவில்லை. திமுக, திக அமைப்பு, நீதிக்கட்சியின் DNAவிலேயே பட்டியல் சமூகத்தின் விரோதப் போக்கு இருக்கின்றது.

தயாநிதி மாறன் R.S.பாரதியை குண்டாசில் கைது செய்ய வேண்டும். திமுகவின் ஒன்றிணைவோம் வா ஒரு பப்ளிசிட்டி தான். பிரதமரைப் பற்றி அவதூறு பேசினால் அவர்களுக்குப் புரியும் பாஷையில் அதே மாதிரி திருப்பி அடிப்போம். ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். விரைவில் நல்ல முடிவு விரைவில் எடுப்பார்கள்” என கூறியுள்ளார்.

Previous articleதமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க முடிவு?
Next articleவாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் காப்பீட்டுக்கு மத்திய அரசு அறிவித்த சலுகை