ஸ்டாலினுக்கு நாக்கு நீளுது : கிழித்து தொங்கவிடும் ஹச்.ராஜா…!!

Photo of author

By Parthipan K

திருப்பூரை அடுத்துள்ள பெருமாநல்லூர் என்ற ஊரில் சேவா பாரதி அமைப்பினர் ஆதரவற்றோருக்கு உணவு தயாரித்து வழங்கி வந்துள்ளனர். இந்த அமைப்பினர் பெருமாநல்லூரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் உணவை சமைத்து கணக்காம்பாளையம், ஈட்டிவீராம்பாளையம் பகுதிகளில் வழங்கி வந்துள்ளனர்.

சேவா பாரதி அமைப்பினரை அதே பகுதியைச் சேர்ந்த ஊராட்சி துணைத் தலைவரும் திமுகவின் கிளை செயலாளருமான வேலுசாமி, உணவு வழங்க கூடாது என்று தடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அவர்கள் சமைக்கும் உணவில் 130 பொட்டலங்களை தங்களுக்கு வழங்கும்படி வற்புறுத்தியதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பாஜகவின் ஒன்றிய தலைவர் ஜெகதீஷ் கூறுகையில்; ‘கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து சேவா பாரதி அமைப்பினர் பாஜகவினருடன் இணைந்து உணவு வழங்கி வருகின்றனர்.

இவர்கள் பெருமாநல்லூர் உள்ள அங்காளம்மன் கோயிலில் உணவை தயாரித்து அரசு அனுமதியுடன் வழங்கி வந்தனர். இந்த அமைப்பினரை உணவு வழங்க கூடாது என்று தடுத்தும் தங்களுக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கும்படி கேட்டும் பிரச்சனை செய்துள்ளார் வேலுசாமி’ என்று கூறினார்.

இது பற்றி வேலுசாமியிடம் காரணம் கேட்டபோது அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி இவர்கள் அனுமதியில்லாமல் உணவு வருகின்றனர். மேலும் தங்களுக்கு என உணவு பொட்டலங்கள் எதுவும் கேட்கவில்லை என்று கூறினர்.

இந்தநிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹச்.ராஜா டுவிட்டரில் ‘திமுக ஒருநாளும் திருந்தாது. இந்த லட்சணத்தில் ஸ்டாலினுக்கு நாக்கு நீளுது’ என்று விமர்சித்து அது பற்றி செய்தி தாளில் வந்த ஒரு படத்தையும் பதிவிட்டுள்ளார்.