பாஜக டில்லியில் ராஜாவாக இருந்தாலும், தமிழகத்தில் திராவிட கட்சிகளின் தயவால் தான் சவாரி செய்ய முடியும் என செல்லூர் ராஜு கூட்டணித் தலைமை குறித்து தெரிவித்துள்ளார்.
அண்மையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார் போது அவர் கூறியதாவது, “நீட் விவகாரம், இலங்கை தமிழர்கள் பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்களில் திமுக இரட்டை வேடம் போட்டு விட்டு ஆளும் அரசை குறை கூறி வருகிறது.
தினமும் தன்னுடைய பெயர் ஊடகங்களில் வெளிவரவேண்டும் என்பதற்காகவே மு.க.ஸ்டாலின் வேண்டுமென்றே தமிழக அரசினைக் குறை கூறி வருகிறார்.
அதேசமயம் எதிர்க்கட்சி ஆளும் அரசை பாராட்ட வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
மேலும் விஜய் ரசிகர்கள் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ளும் வகையில், மதுரையில் சுவரொட்டிகளை ஒட்டி வருகிறார்கள். நடிகர் விஜய் சினிமாவில் நன்கு வாளர்ந்து வருகிறார். அவரது ரசிகர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?”.
மேலும் பாஜக தலைமையில் தான் கூட்டணி அமைய வேண்டும் என்பது குறித்து எச் ராஜா கூறிய கருத்துக்கு பதிலளித்த அவர், “எச். ராஜா இப்படித்தான் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார்.
பஜகா டெல்லிக்கு ராஜாவாக இருந்தாலும், திராவிட கட்சிகளின் தலைமையில் தான் அவர்கள் சவாரி செய்ய முடியும். தமிழகத்தில் பாஜக இன்னும் குழந்தையாகவே இருக்கிறது. இன்னும் வளரவேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.