முட்டாள் நம்பர் 1 முட்டாள் நம்பர் 2! எச் ராஜா கலகல!

Photo of author

By Sakthi

காரைக்குடி சட்டசபை தொகுதியில் பாஜக வேட்பாளர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரணியில் குறைந்த விலையிலான மக்கள் மருந்தகம் ஒன்றினை தொடங்கி வைத்தார்.அதன் பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை எதுவும் இல்லை ஆனாலும் பற்றாக்குறை இருக்கிறது என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க எதிர்க்கட்சியின் தூண்டுதலின் பேரில் பலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஒரு முட்டாள் என்று தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லோருக்கும் தெரியும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

அதோடு பெரியாரை பின்பற்றுவதாக தெரிவித்துக் கொள்ளும் கமல்ஹாசன் ஒரு முட்டாள் என்றும், அவர் நடிப்பு மட்டுமே தெரிந்தவர் எனவும், முட்டாள்கள் உலகமாக தமிழகம் மாற்றப்பட்டிருக்கிறது. அதோடு கண்டைனர் மற்றும் மொபைல் டாய்லெட் என்று எதைப் பார்த்தாலும் கமல்ஹாசனுக்கு பயம் தொற்றிக் கொள்கிறது. அதன் பிறகு எப்படி அவர் உலக நாயகனாக மாறுவார் என்று தெரிவித்திருக்கிறார் எச் ராஜா.

பெரியார் தெரிவித்த பகுத்தறிவு சிந்தனை மற்றும் கடவுள் மறுப்புக் கொள்கையை திமுகவை போலவே கமலஹாசனும் பின்பற்றுவதால் அவரை எப்படியாவது கூட்டணியில் இணைத்து விடலாம் என்று தேர்தலுக்கு முன்பு திமுக கடுமையாக முயற்சி செய்து வந்தது. ஆனாலும் திமுகவினர் கடுமையான முயற்சிக்கு எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.எனவே எதிர்காலத்திலாவது அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்று எதிர்கட்சியான திமுக எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.