அவர் ஏன் அலறுகிறார்? ஆளுநர் மாற்றம் தொடர்பாக எச் ராஜா அதிரடி பேட்டி!

Photo of author

By Sakthi

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் அவர்களை பஞ்சாப் மாநில ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமனம் செய்தார். இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநர் நியமனம் செய்து இருக்கிறது மத்திய அரசு.அதாவது காவல்துறை மற்றும் உளவுத்துறை என்று இரண்டு முக்கிய துறையில் பணியாற்றி மிகுந்த அனுபவம் வாய்ந்த நபராக இருக்கின்ற ரவீந்திர நாராயன் ரவி என்ற ஒருவரை தமிழக ஆளுநராக மத்திய அரசு நியமனம் செய்திருக்கிறது.

பாட்னாவில் சார்ந்த இவர் கடந்த 1976 ஆம் ஆண்டு கேரளா மாநில காவல்துறை அதிகாரியாக பணியில் இணைந்தார். அதன்பின்னர் கடந்த 2012ஆம் வருடம் புலனாய்வு பணியகத்தில் சிறப்பு இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர் கடந்த 2014ஆம் வருடம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக முதல் முறையாக பதவி ஏற்ற சமயத்தில் கூட்டு புலனாய்வு குழுவின் தலைவராகவும் கடந்த 2018ஆம் வருடம் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் பணிபுரிந்து இருக்கிறார்.

தமிழகத்திலேயே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இருக்கின்ற இந்த சூழ்நிலையில், இப்படி மத்திய அரசு அதிரடியாக ஒரு முடிவு எடுத்து ஆளுநரை மாற்றி இருக்கிறது. அதுவும் காவல்துறை மற்றும் உளவுத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவரை இந்த மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்திருப்பது அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லோரையும் யோசிக்க வைத்திருக்கிறது.இந்த நிலையில், காவல்துறை மற்றும் உளவுத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த ரவீந்திர நாராயணன் ரவி அவர்களை தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டு இருப்பதில் உள்நோக்கம் இருக்கிறது என்று சந்தேகம் இருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி கூறியிருக்கின்றார்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு ஆகவே இது போன்ற நியமனங்களை மத்திய அரசு செய்து வருவது கண்டனத்திற்கு உரியது என்று கூறியிருக்கிறார். கடந்த காலங்களில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான கிரண் பேடியை புதுச்சேரி மாநில ஆளுநராக நியமனம் செய்து அங்கே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சியை சரிவர நடத்த விடாமல் இடையூறு செய்தார் பிரதமர் நரேந்திர மோடி என்று கூறியிருக்கிறார்.அந்த விதத்தில் தற்போது தமிழ்நாட்டிலும் அவருடைய சித்து விளையாட்டுக்களை தொடங்கியிருக்கிறார். பிரதமர் மோடியின் கூறியிருக்கிறார் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ரவி அவர்களை தமிழக ஆளுநராக நியமித்து இருப்பதும் சந்தேகத்தை உண்டாக்கி இருக்கிறது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆர். என் ரவியை தமிழக ஆளுநராக பிரதமர் நரேந்திர மோடி நியமித்து இருக்கிறாரோ என்ற சந்தேகம் என்னுள் எழுகிறது என்று கூறியிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், காரைக்குடியில் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாற்றும் போது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மற்றும் உளவுத் துறையில் பணியாற்றிய ஒருவர் புதிய ஆளுநராக தமிழ்நாட்டிற்கு நியமனம் செய்யப்பட்டு இருப்பதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து கூறி வரவேற்று இருக்கிறார் என கூறியிருக்கிறார் எச் ராஜா.ஆனாலும் திருடனுக்கு தேள் கொட்டியது போல தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி அலறிக்கொண்டு இருப்பது எதற்காக என தெரியவில்லை ஒருவேளை கே எஸ் அழகிரி ஏதாவது கல்லூரியில் ஊழல் செய்தாரா அதனால் தான் அவருக்கு ஏதோ ஒரு நெருடலை ஏற்படுத்தி இருக்கிறதா? என அடுக்கடுக்கான கேள்வியை எழுப்பியிருக்கிறார் எச் ராஜா.

ஏற்கனவே இந்த ஆளுநர் மாற்றம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சற்று பயந்து போய் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் புன்னகைத்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது.ஒருவேளை தற்போது வந்திருக்கக் கூடிய புதிய ஆளுநர் ஆளுநருக்கான முழு அதிகாரத்தையும் பயன்படுத்தினால் அது நிச்சயமாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் என கூறுகிறார்கள்.