ஹெச் வினோத் & விஜய் சேதுபதியின் அடுத்த பட ஷூட்டிங் தொடங்குவது எப்போது?

0
107

ஹெச் வினோத் & விஜய் சேதுபதியின் அடுத்த பட ஷூட்டிங் தொடங்குவது எப்போது?

இயக்குனர் ஹெச் வினோத் தற்போது அஜித் நடிக்கும் அஜித் 61 படத்தை இயக்கி வருகிறார்.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏகே 61 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வலிமை திரைப்படம் எதிர்பார்த்தபடி நல்ல விமர்சனங்களைப் பெறாததால் அஜித் 61 படத்துக்காக கடுமையாக உழைத்து வருகிறார் ஹெச் வினோத். இந்நிலையில் இந்த படத்தை முடித்ததும் அவர் அடுத்து விஜய் சேதுபதியைக் கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தை மாஸ்டர், கோப்ரா மற்றும் மகான் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்து விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகும் படத்தையும் லலித் குமார்தான் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அஜித் 61 படம் ஆகஸ்ட்டில் முடிந்ததும் உடனடியாக அந்த படத்தை தொடங்க வேண்டும் என ஹெச் வினோத் திட்டமிட்டு இருந்தாராம். ஆனால் இப்போது அஜித்61 படம் தாமதம் ஆவதால் நவம்பர் மாதத்துக்கு அந்த படத்தை தள்ளிவைக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.