விஜய் சேதுபதியோடு கூட்டணி போடும் ஹெச் வினோத்… இணைந்த விஜய் பட தயாரிப்பாளர்

0
180

விஜய் சேதுபதியோடு கூட்டணி போடும் ஹெச் வினோத்… இணைந்த விஜய் பட தயாரிப்பாளர்

ஹெச் வினோத் அடுத்து தான் இயக்கும் படத்திற்கு விஜய் சேதுபதியை கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏகே 61 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வலிமை திரைப்படம் எதிர்பார்த்தபடி நல்ல விமர்சனங்களைப் பெறாததால் அஜித் 61 படத்துக்காக கடுமையாக உழைத்து வருகிறார் ஹெச் வினோத். இந்நிலையில் இந்த படத்தை முடித்ததும் அவர் அடுத்து விஜய் சேதுபதியைக் கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை மாஸ்டர், கோப்ரா மற்றும் மகான் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்து விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகும் படத்தையும் லலித்தான் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் ஹெச் வினோத் நடிகர் கமல்ஹாசனுக்கு அரசியல் சம்மந்தமான கதை ஒன்றை சொல்லியுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கமல் நடிக்காமல் போனாலும், அவரின் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Previous articleசிறந்த நிறுவனங்கள் பட்டியலில்  இடம்பெற்ற  தமிழக கல்வி நிறுவனங்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு!…
Next articleமீண்டும் தாமதம் ஆகும் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் திரைப்படம்… பின்னணி என்ன?