சிசிடிவி கேமராவும் ஹேக் செய்யப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்

0
140

சிசிடிவி கேமராவும் ஹேக் செய்யப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்

பாதுகாப்பை காரணம் காட்டி ஒவ்வொரு வீட்டிலும் சிசிடிவி கேமராக்கள் வைக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி வரும் நிலையில் சிசிடிவி கேமராக்களையும் ஹேக்கர்கள் ஹேக் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவில் உள்ள ஆஷ்லி லிமே என்ற பெண் இரவு நேரத்தில் வேலைக்கு செல்ல இருப்பதால் அவரது 8 வயது மகளை தனியாக வீட்டில் விட்டு சென்றுள்ளார். இதனால் அவர் குழந்தையை கண்காணிக்க சிசிடிவி கேமரா ஏற்பாடு செய்து அதன் மூலம் அவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதே குழந்தையையும் கண்காணித்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென சிசிடிவி கேமராவை மர்ம நபர் ஒருவர் ஹேக் செய்து குழந்தையுடன் பேசி உள்ளதாகவும் அது மட்டுமின்றி குழந்தையின் ஒவ்வொரு நடத்தையையும் ஹேக்கர் கண்காணித்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

சிசிடிவி கேமரா மூலம் பொருள் மர்ம நபர் பேசியதாக ஆஷ்லி லிமேயின் மகள் கூறியதும் அதிர்ச்சி அடைந்த அவர் கேமராவில் பதிவான வீடியோக்களை பார்த்தபோது அது உண்மை என தெரிய வந்தது.

இதனை அடுத்து சிசிடிவி கேமரா வாங்கிய நிறுவனத்திடம் அவர் புகார் கொடுத்துள்ளார். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு தங்களுக்கு மிகவும் முக்கியம் என்றும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த கேமரா நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட கேமராவே ஆபத்தாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Previous articleபள்ளி மாணவன் பிறப்புறுப்பை பிடித்து கொடுமைப்படுத்திய பெண் ஆசிரியர்கள் மீது போக்சோ பாய்ந்தது! கோவையில் அதிர்ச்சி சம்பவம்
Next article61 வயது பிரபல பாடகியின் 26 வயது காதலன்!