நாங்கள் இதை செய்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்! மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி!
நேற்று(மே 26) நடைபெற்ற இரண்டாவது குவாலிபையர் சுற்றில் குஜராத் அணிக்கு எதிராக மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி பெற்றது.
முதலில் பேட் செய்த குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் சோர்த்தது. குஜராத் அணியில் சுப்மான் கில் அதிரடியாக விளையாடி சதம் அடித்து 129 ரன்கள் சேர்த்தார். சாய் சுதர்ஷன் 43 ரன்களும் குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா 28 ரன்களும் சேர்த்தனர்.
இதையடுத்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 18.2 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதையடுத்து இந்த போட்டி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி கேபடன் ரோஹித் சர்மா “குஜராத் டைட்டன்ஸ் அணியித் சுப்மான் கில் நன்றாக விளையாடினார். நாங்கள் விளையாடும் பொழுது பவர் பிளேயில் 2 விக்கெட்டுகளை இழந்ததால் சரியான மொமெண்டம் கிடைக்காமல் போனது.
எங்கள் பந்துவீச்சு சரியாக அமையவில்லை. எலிமினேட்டர் போட்டியில் பந்துவீசியது போல இந்த போட்டியில் சரியாக பந்து வீசவில்லை. ஒரு பேட்ஸ்மேன் நன்றாக கடைசி வரை ஆடி இருந்தால் வெற்றி பெற்றிருப்போம். இஷான் கிஷன்க்கு காயம் ஏற்பட்டது எங்கள் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. குஜராத் அணி நன்றாக விளையாடியது” என்று கூறினார்.