இந்தியாவில் முதல் முறையாக காவல்துறைக்கு புதிய வசதி! தமிழகக் காவல்துறை அறிவிப்பு!

இந்தியாவில் முதல் முறையாக காவல்துறைக்கு புதிய வசதி! தமிழகக் காவல்துறை அறிவிப்பு!
இந்தியாவில் முதல் முறையாக கோவையில் பணிபுரியும் காவலர்களுக்கு புதிய வசதி ஒன்றை தமிழக காவல் துறை அறிவித்துள்ளது.
இது வரை தமிழக காவல் துறையினர் ஜீப், கார், இருசக்கர வாகனம் போன்ற வாகனங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர். தற்போதும் இதோ வாகனங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காவல் துறையினர்க்கு புதிய வசதி ஒன்றை தமிழக காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த புதிய வசதி என்ன என்றால் காவல் துறையினர் ரோந்து செல்வதற்காக ஆட்டோககளை அறிமுகம் செய்துள்ளது தமிழக காவல் துறை. இந்தியாவில் முதல் முறையாக கோவை மாவட்டத்தில்  போலிசார் ரோந்து செல்ல இரண்டு சிவப்பு நிற ஆட்டோக்களை தமிழக காவல்துறை அளித்துள்ளது.
இந்த இரண்டு சிவப்பு நிற ரோந்து  வாகனமும் பேட்டரி வாகனங்கள் ஆகும். இந்த சிவப்பு நிற ரோந்து ஆட்டோக்களில் ஒலிப்பெருக்கி, சிவப்பு மற்றும் நீல நிற விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ரோந்து ஆட்டோக்கள் இன்று முதல் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது.