தலைமுடியை பராமரிக்கவும்,பொடுகு,பேன் போன்ற பாதிப்புகளில் இருந்து விடுபடவும் விரும்பினால் இங்கு சொல்லப்பட்டுள்ள டிப்ஸை பாலோ பண்ணலாம்.
முடி உதிர்வு:
முடக்கத்தான் கீரையை தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் அரைத்து தலை முழுவதும் தடவி ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.பிறகு சீகைக்காய் பயன்படுத்தி தலை முடியை அலச வேண்டும்.இப்படி வரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் முடி உதிர்வு நின்றுவிடும்.
பேன் தொல்லை:
சீத்தாப்பழ விதையை பொடித்து நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து ஆறியப் பிறகு தலைக்கு பயன்படுத்தி வந்தால் பேன் தொல்லை நீங்கும்.
பொடுகுத் தொல்லை:
வேப்பிலை மற்றும் பொடுதலை இலையை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவைத்து தலையில் தடவி வந்தால் பொடுகு நீங்கும்.
எலுமிச்சை சாறை தேங்காய் எண்ணையில் கலந்து தலைமுழுவதும் தடவி குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.வேப்பம் பூவை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவைத்து தலைக்கு தடவினால் பொடுகு நீங்கும்.
வழுக்கை:
சின்ன வெங்காயத்தை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை தலையில் முடி வளரும்.
கற்றாழை ஜெல்லை தேங்காய் எண்ணெயில் கலந்து அதிக முடி உதிர்வு இருக்கும் இடத்தில் தடவினால் முடி உதிர்வு நின்று வளர்ச்சி அதிகரிக்கும்.
தலை சூடு
வெந்தயத்தை தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்கு அப்ளை செய்து வந்தால் தலை சூடு நீங்கும்.இதனால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுவது தடுக்கப்படும்.
தலை எண்ணெய் பசை
தலையில் உள்ள எண்ணெய் பசை நீங்கி பளபளப்பாக மாற சீகைக்காய் பொடியை வடித்து ஆறவைத்த கஞ்சியில் கலந்து தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.
ஆளி விதையை தண்ணீரில் ஊறவைத்து தலைக்கு தடவி குளித்தால் முடி பளபளப்பாக மாறும்.அரிசி ஊறவைத்த நீரில் வெந்தய பேஸ்ட் சேர்த்து தலையில் தடவி குளித்தால் முடி மிருதுவாக மாறும்.
தலை அரிப்பு
தேங்காய் எண்ணையில் வேப்பிலை,கடுக்காய் போன்றவற்றை போட்டு காய்ச்சி ஆறவைத்து தலைக்கு தடவி வந்தால் அரிப்பு,எரிச்சல் நீங்கும்.
முடி வளர்ச்சி
செம்பருத்தி பூ மற்றும் செம்பருத்தி இலையை பேஸ்டாக அரைத்து தலைக்கு தடவி குளித்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
இளநரை
தேங்காய் எண்ணையில் கருஞ்சீரகப் பொடி கலந்து தலையில் தடவினால் இளநரை நீங்கும்.கறிவேப்பிலை எண்ணையை தலைக்கு அப்ளை செய்தால் முடி கருமையாக மாறும்.