தொங்கும் பாலம் அறுந்து விழுந்த விபத்து: 9 பேர் கைது! 141 ஆக உயிரிழப்பு அதிகரிப்பு!
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சூ என்ற ஆற்றின் குறிக்கே கட்டப்பட்ட தொங்கும் பாலம் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி அறுந்து விழுந்தது.
அதாவது விடுமுறை தினமான அக்டோபர் 30ம் தேதி சத் பூஜையை முன்னிட்டு, வழிபடுவதற்காக சென்ற 500க்கும் மேற்பட்டவர்கள் பாலம் அறுந்து விழுந்ததில் ஆற்றினுள் மூழ்கினர்.தற்போது வரை மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில்,இதுவரையில் 141 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த பாலம் அருந்து விழுந்ததற்கு முக்கிய காரணம்,தொங்கும் பாலத்தை சீரமைக்கும் பணி ஒப்பந்தத்தை அரசிடம் இருந்து ஒரேவா ட்ரஸ்ட் என்ற தனியார் நிறுவனம் பெற்றது.கடந்த ஏழு மாதங்களாக இந்த பாலம் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி,மக்கள் பார்வையிட பாலம் சரியான நிலையில் உள்ளது மற்றும் சீரமைப்பு பணிகள் எந்தெந்த இடத்தில் நடைபெற்றது போன்ற எந்தவித சான்றிதழும் அரசிடமிருந்து பெறாமல் பாலம் திறக்கப்பட்டது.இதுவே பாலம் அறுந்து விழுந்ததற்கான முக்கிய காரணம்.
இந்நிலையில் விபத்து தொடர்பாக 9 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளன.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்கோட் தரக ஐஜி அசோக் யதவ்,இந்த விபத்து தொடர்பாக பாலத்தை ஒப்பந்தத்தில் எடுத்த தனியார் நிறுவனத்தின் மேலாளர்,பாலத்தில் ஏறுவதற்கான டிக்கெட்டுகளை விற்ற பணியாளர் மற்றும் பாதுகாப்பு பணியாளர் என 9 பேரின் மீது வழக்குகள் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளது.விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் செய்தியாளர்களிடம். தெரிவித்தார்.