லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவரும் லிவ்விங் டுகெதர் இருப்பதாக பேச்சுகளும் அடிபடுகின்றன.
எப்போ திருமணம் என்று கேட்கும் ரசிகர்களிடம் விக்னேஷ் சிவன் ‘சினிமாவில் சாதிக்க வேண்டியது அதிகம் உள்ளது அதன் பிறகுதான் திருமணம் ‘என்று கூறியுள்ளார்.
தற்போது இருவரும் கோவாவில் உள்ள பிரைவேட் ஹவுஸில் ஓய்வை கழித்து கொண்டிருக்கின்றனர் விக்னேஷ் நயன்தாரா.நயன்தாரா நீச்சல் குளத்தின் அருகில் இருக்கும் போட்டோவையும் நைட்டியில் பூப்பறிக்கும் போட்டோவையும் வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கினார் விக்னேஷ்.
இதெல்லாம் ஒருபுறமிருக்க இன்று பிறந்தநாள் காணும் நயன்தாராவின் அம்மாவுக்கு விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவரது வருங்கால மாமியாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அந்த போட்டோவில் ‘ஹாப்பி பர்த்டே மை டியர் அம்மு மிஸஸ் குரியன்’ என கேட் கட் பண்ணும் ஃபோட்டோவை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். இன்னைக்கு இன்னைக்கு இந்த போட்டோ தான் சமூகவலைதளத்தில் ட்ரெண்டாகி உள்ளது.