நடிப்பு அரக்கனுக்கு குவிந்து வரும் பிறந்த நாள் வாழ்த்து!!

Photo of author

By Vinoth

நடிப்பு அரக்கனுக்கு குவிந்து வரும் பிறந்த நாள் வாழ்த்து!!

Vinoth

Happy birthday to the acting monster!!

இன்று நடிகர் கமல்ஹாசன் தனது 70-வது பிறந்தநாளில் தற்போது நடித்து வெளிவரவிருக்கும் தக் லைப் படத்தின் புதிய போஸ்டர்கள் இன்று காலை 11 மணிக்கி வெளியாக உள்ளது. மேலும் தமிழக முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் நடிகர் மட்டுமின்றி திரைத்துறையில் மற்றும் சமூக ஆர்வலர், அரசியல்வாதி என பல அவதாரம் கொண்ட கமல்ஹாசன் அவர்களுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் “பிறக்கின்ற புதுமைகளுக்கெல்லாம் இந்தியத் திரையுலகின் வாயிற்கதவுகளைத் திறக்கின்ற கலைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! திரைக்களம் தொடங்கி அரசியல் களம் வரை முற்போக்கு – பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்யும் அருமை நண்பர் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் தொண்டு சிறக்க விழைகிறேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் துணைத்தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். அதில் “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கலைஞானி என போற்றப்பட்ட திரையுலகின் பேராளுமை. கழகத்தலைவர் அவர்களின் அன்பு நண்பராக – கழகத்தோடு கரம் கோத்து ஓரணியாய் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் முற்போக்கு முகம்.மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் உலகநாயகன் கமல்ஹாசன் சாருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மதவாத – பிளவுவாத அரசியலை சரியான தளத்தில் நின்று எதிர்த்து வரும் கமல் சாரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.